பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியது பாஜக அரசு.. அப்போ யார் குறைக்க வேண்டும்.. பிடிஆர் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலாற்றில் ஒருமுறை கூட எரிபொருளுக்கு வரியை உயர்த்தாத திமுக அரசு ஏன் வரியை குறைக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து லோக் சபாவில் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடந்தது. அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை என மத்திய அரசை கடுமையான விமர்சித்தார்.

நிர்மலா சீதாராமன் கேள்வி

நிர்மலா சீதாராமன் கேள்வி

கனிமொழியின் பேச்சுக்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் தேர்தலுக்கு முன், பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்பதாக திமுக வாக்குறுதியளித்தது. அதேபோல டீசலுக்கு ரூ.4 குறைப்பதாகவும் கூறியது. சிலிண்டருக்கு மானியம் தருவதாகவும் உறுதியளித்தது. ஆனால் இப்போது அதுபற்றி கேட்டால், எப்போது குறைப்போம் என சொல்லவில்லை என்று திமுக அமைச்சர் கூறுகிறார்.

ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை இரண்டு முறை குறைத்து விட்டது. ஆனால் திமுக அரசு மாநிலத்தில் ஏன் விலையைக் குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மத்திய நிதியமைச்சராக இருந்துகொண்டு ஒரு மாநிலத்தை மட்டும் குறிப்பிட்டு பேசியதோடு, மாநில அரசு ஏன் வரியை குறைக்கவில்லை என்று கேள்வி கேட்டது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிடிஆர் பதில்

பிடிஆர் பதில்

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். அதில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைத்துள்ளது.

திமுக அரசு

திமுக அரசு

ஆனால் மத்திய அரசு தேர்தல் சமயத்தில் பெட்ரோல், டீசல் மீது ஏற்றிய வரியை குறைவாக குறைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு வரலாற்றில் திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்திருக்கிறதோ அப்போதெல்லாம் பெட்ரோல், டீசலில் வரி குறைப்பு தான் செய்யப்பட்டிருக்கிறதே தவிர ஏற்றப்பட்டதில்லை.

Recommended Video

    PTR Reveals | ஊழல் பத்திலாம் பேச நேரமில்லை *Politics
    பாஜக மீது விமர்சனம்

    பாஜக மீது விமர்சனம்

    அனைத்து நிதி ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு, அதிகமாக வரியை ஏற்றி விட்டு, குறைவாக குறைத்துள்ளனர். ஆனால் வரியை உயர்த்தாத மாநிலங்களை குறைக்க வேண்டும் என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆனாலும் ஆகஸ்ட் மாதத்தில் வரி குறைப்பு செய்துள்ளோம். மத்திய அரசு வரியை ஏற்றும் போது மாநில அரசு, அவர்கள் குறைக்கும் போது மட்டும் குறைக்க வேண்டும் என்று கூறுவது சரியா என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இதில் யார் வரியை குறைக்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு முறை எரிபொருள் மீதான வரியை உயர்த்திய பாஜக அரசா? அல்லது வரலாற்றில் ஒருமுறை கூட எரிபொருள் மீதான வரியை உயர்த்தாத தமிழக அரசா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+