காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது யார்?.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை
சென்னை: காமராஜரை தவிர காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திற்கு எந்தவொரு அடையாளமும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா என்று அண்ணாமலை கேட்டிருந்த நிலையில், காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது யார் என்று கேட்டு அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும், முதல்வருமான முக. ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க நாடாளுமன்ற திமுக லோக்சபா எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திமுக எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பெரும்புதூர் தொகுதியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு மற்றும் சட்டப் பேரவை உறுப்பினரான நானும் முதல்வரைச் சந்தித்தோம். திருப்பெரும்புதூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன.
வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக திருப்பெரும்புதூர் உள்ளது. அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்வரிடம் கொடுத்துள்ளோம். அதனை பரிசீலித்து ஊரகத்துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றார்.
தொடர்ந்து, காமராஜர் விவகாரம் குறித்த கேள்விக்கு, காமராஜர் விவகாரத்துக்கு நேற்று காலையே முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்றார். தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா. குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா என்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியது குறித்து கேட்டதற்கு, ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம். அப்படி காங்கிரஸைப் பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை.
பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது யார். அண்ணாமலையின் மூதாதையர், அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைவாதிகள் பெருந்தலைவர் காமராஜரை வீட்டோடு வைத்து புதுதில்லியில் கொழுத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். அதனை செய்துவிட்டு தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம் போடுகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் வேஷத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications