சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் இருக்கேன்.. டெல்லிக்கு தூது விட்ட தமிழக "புள்ளி".. கொடுத்த டாஸ்க்கை முடிங்க.. கை விரித்த ராகுல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்றுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தேசிய அளவில் தலைவர் பதவிக்கு தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் தலைவரை மாற்றுவதற்கான தேர்தல் நடக்கும் என்கிறார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.

காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் சோனியா காந்தி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன.

இந்த தேர்தலில் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரும் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இத்தாலியில் தாய் மரணம்! சோனியா காந்திக்கு கடவுள் பலத்தை தரட்டும் - குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல் இத்தாலியில் தாய் மரணம்! சோனியா காந்திக்கு கடவுள் பலத்தை தரட்டும் - குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல்

 காங்கிரஸ்

காங்கிரஸ்

அவர்களுக்கு பதிலாக அவர்களுக்கு நெருக்கமான அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அசோக் கெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். இதற்கு முன் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தவரும் அசோக் கெலாட்தான். கடந்த குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க அசோக் கெலாட் சூத்திரதாரியாக் இருந்தார்.

அசோக் கெலாட்

அசோக் கெலாட்

இந்த நிலையில் அசோக் கெலாட் தலைவரானால்.. ராகுல் காந்தி மறைமுகமாக காங்கிரசில் முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதாவது அதிகாரபூர்வமாக அசோக் கெலாட்தான் தலைவர். ஆனால் ராகுல் காந்திதான் மறைமுகமாக முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கும் முடிவில் ராகுல் காந்தி கையே ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைவருக்கான தேர்தல் முடிந்ததும் பல மாநிலங்களின் காங்கிரஸ் தலைவரை மாற்றியமைக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் ராகுல்காந்தி.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரியின் 3 ஆண்டு கால பதவி முடிந்து விட்டது. எக்ஸ்டென்சனில்தான் இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் உறுதி என்கிற நிலையில், தலைவர் பதவியை கைப்பற்ற பலரும் இப்போதே மறைமுக முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இதற்காக பல்வேறு பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் பெயர் கூட தலைவர் பதவிக்கான பெயரில் அடிபட்டது. ஜோதிமணி பெயரும் தலைவருக்கான ரேஸில் அடிபட்டது. இந்த ரேஸில் மிக முக்கியமானவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான மாணிக்கம் தாக்கூர் எம்.பி.! இது குறித்த தனது விருப்பத்தை சமயம் பார்த்து ராகுலிடம் மெல்ல சொல்லியிருந்திருக்கிறார் அவர். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும் என்று அவர் நூல் விட்டு பார்த்து இருக்கிறார்.

டாஸ்க்

டாஸ்க்

அப்போது, ''தெலுங்கானா இன்சார்ஜ் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கு. அங்கு காங்கிரசை வளர்க்கப் பாருங்க. தெலுங்கானாவுக்கு தேர்தல் வரப்போகிறது. தெலுங்கானாவை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. அங்கு ஆட்சியை பிடிக்கும் வகையில் காங்கிரசை சக்சஸ் பண்ணிக் காட்டுங்க. அப்புறம் பேசிக்கலாம் '' என்று மறுத்து விட்டாராம் ராகுல்காந்தி. இதனால் இந்த டாஸ்க்கை முடிக்க தீவிரமாக பணிகளை செய்து வருகிறாராம், மாணிக்கம் தாக்கூர்.

English summary
Who will be new Tamilnadu Congress Chief and What is Rahul Gandhi plan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X