டெல்லியில் இருந்து வரும் புதிய தலை? சரத்குமாரும் ரேஸில் இருக்கிறார்? தமிழக பாஜக புதிய தலைவர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவருக்கான புதிய ரேஸில் மொத்தமாக 6 பேர் உள்ளார்களாம். இதில் முக்கியமான சர்ப்ரைஸ் முகம் ஒன்றும் இருப்பதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

annamalai Edappadi Palaniswami

இதனால் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட போவதாக பலர் எதிர்பார்க்கிறார்கள். யாராவது டெல்லி சென்றால் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பேச்சு வரும். அண்ணாமலை லண்டனுக்கு சென்ற போதும் இதேபோல் செய்திகள் வந்தன.

எச். ராஜா தலைமையில் குழு அமைந்த போதும் இதேபோல் செய்திகள் வந்தன. இப்போது தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். உடனே அண்ணாமலையை மாற்ற போவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் உண்மையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவரை வைத்தே கட்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு வருடத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு அவரை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளன என்றும் இன்னொரு விதமான வாதங்கள் வைக்கப்படுகின்றன.

உறுதி

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட அண்ணாமலை பதவி விலகுவது அல்லது நீக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

இதனால் புதிய தலைவர் பதவிக்கு 6 பேர் லிஸ்டில் உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம், டெல்லியை சேர்ந்த தமிழ் பின்புலம் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆகியோர் உள்ளனர்.

நயினார் நாகேந்திரன்

2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம். இதன் காரணமாகவே நயினார் நாகேந்திரனை தலைவராக்க டெல்லி ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

வானதி சீனிவாசன்

அதே சமயம் வானதி சீனிவாசன் கூட்டணியை உருவாக்குவதில் திறமைசாலி. கடந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாக பேச்சுவார்த்தை நடத்தியது இவர்தான்.

அதோடு சிட்டிங் எம்எல்ஏ. எந்த சர்ச்சையும் இல்லை. கூட்டணியை அனுசரித்து செல்வார். சர்ச்சையாக பேச மாட்டார். ஒரு சாப்ட் முகம் உள்ளது. அரசியல் நுணுக்கம் உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் ரேஸில் உள்ளனர்.

இது போக சரத்குமார் கட்சியை களைந்துவிட்டு பாஜகவிற்கு வந்ததால் அவர் மீதும் டெல்லி கண் உள்ளதாம். நல்ல, புதிய முகமாக அவர் இருக்கலாம் என்று நினைக்கிறதாம். அதே சமயம் பாஜக சர்ப்ரைஸ் தருவதில் சிறந்த கட்சி. இதனால் பெரும்பாலும் டெல்லியை சேர்ந்த தமிழ் பின்புலம் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி தலைவர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். மொத்தத்தில் புதிய தலைவர் பதவிக்கு 6 பேர் லிஸ்டில் உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம், டெல்லியை சேர்ந்த தமிழ் பின்புலம் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆகியோர் உள்ளனர்.

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+