அண்ணாமலைக்கு பதில் தமிழக பாஜக தலைவர் ரேஸில் இந்த 4 பேராம்! எஸ்வி சேகர் சொல்றதை பாருங்க
சென்னை: தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை நீக்கப்படுவதாகவும் அவருக்கு பதிலாக அந்த இடத்திற்கு 4 பேர்களின் பெயர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதல் நடந்த தேர்தல்களில் பாஜகவின் வாக்கு வங்கி குறைந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகளை வைத்து மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அபத்தமாக பேசி வருகிறார் என்றும் என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி வருவதாக கூறிவருகிறார் என்றும் மூத்த தலைவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவர்களுடைய மனக்குமுறல்கள் எப்படியாவது வெளிப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துவிட்டு பலர் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் அண்ணாமலையின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் மீது ஆரம்பத்திலிருந்தே எஸ்.வி.சேகருக்கு ஆதங்கம் இருந்து வருகிறது. அது நாளாக நாளாக குமுறி எரிமலை போல் வெடித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளுக்கு எஸ்.வி.சேகர் பேட்டி அளித்து வருகிறார். அதில் அண்ணாமலை வார்ரூமை வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது சேற்றை வாரி பூசி வருவதாகவும் அவர் ஜாதி வெறிப்பிடித்தவர் என்றும், அவர்தான் அடுத்த பிரதமர் என வார் ரூம் மூலம் கூறிவருகிறார்கள். இதெல்லம் அபத்தாமாக இல்லையா என கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில் டிவிட்டர் ஸ்பேஸ் மூலம் அவர் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை தமிழக பாஜக வளர்ச்சி அடையாது. மேலும் அண்ணாமலை மீது நிறைய புகார்கள் டெல்லி தலைமைக்கு சென்று கொண்டே இருக்கிறது.
ஆனால் அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மூலம் அவர் பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் அவர் புதிய கட்சியை தொடங்கிவிடுவார் என தெரிவித்துள்ளார். அது போல் எஸ்.வி.சேகரை ஒன் இந்தியா சார்பாக தொடர்பு கொண்டு பேசிய போது தமிழக பாஜக தலைவர் ரேஸில் 4 பேர் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன், கல்யாணராமன், ஆர்.எஸ்.எஸ். நல்லகண்ணு , நயினார் நாகேந்திரன். இவர்களில் டெல்லி தலைமை நிச்சயம் ஒருவரை தேர்வு செய்து தமிழக பாஜக தலைவராக்கும். அண்ணாமலை பாஜகவில் இருக்கும் வகை தமிழகத்தில் பாஜக வளரவே வளராது. பிரதமர் மோடி மீது மரியாதை வைத்துதான் நான் இந்த கட்சியில் நீடித்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார்












Click it and Unblock the Notifications