தென் சென்னை எம்பி தொகுதி யாருக்கு?.. இருவருமே முக்கியமானவர்கள்.. சங்கடத்தில் அதிமுக.. பாஜக ஜரூர்
சென்னை: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பியும் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தனுக்கு கொடுப்பதாக அதிமுக தலைமை உறுதியளித்திருந்த நிலையில் அந்த தொகுதியை அலேக்காக கொத்தி செல்ல பாஜக முயற்சிக்கிறது. இந்த தொகுதியை குஷ்புவும் குறி வைக்கிறார் என சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு பாஜக இப்போதே ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் நிறைய சம்பவங்கள் நடந்தன.

எனினும் அதிமுக தலைமையிலான கூட்டணி பாஜக அங்கம் வகிக்கும் என இரு கட்சிகளும் உறுதியளித்துள்ளன. எனினும் தமிழகத்தில் 25 பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வந்தார்.
கூட்டணியில் இருக்கும் போது மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 25 ஐ எப்படி பாஜகவுக்கு அதிமுக விட்டுக் கொடுக்கும். ஒரு வேளை பாஜக தனித்து போட்டியா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ஒரு வேளை அதிமுகவிடம் 25 சீட்டுகளை "எப்படியாவது" பாஜக பெற்றுவிடுமா என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால் அதிமுகவினரோ பாஜகவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே சீட்டுகளை ஒதுக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
மேலும் கட்சி தலைமைதான் சீட் குறித்து பேசும் அண்ணாமலை எதையாவது பேசட்டும் என்ற ரேஞ்சுக்கு அதிமுகவினர் அமைதி காத்தனர். ஆனால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் அமித்ஷாவோ நேற்றைய தினம் சிதறு தேங்காய் உடைப்பது போல் பேசிவிட்டார். தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி என்பதே இலக்கு என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்படவில்லை. ஆனால் கூட்டணி தலைமையான அதிமுகவுக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையிலும் இவர்களாகவே அதிமுகவுக்கு 15 இடங்களை கொடுப்பது போலும் அமித்ஷா பேசியுள்ளார். அதிலும் கடந்த முறை தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தோற்றுவிட்டார்.
இதனால் இந்த முறை தென் சென்னை தொகுதியில் ஜெயவர்தனுக்கு சீட் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென் சென்னையில் பூத் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் நடந்து வருவதாக அமித்ஷா கூறியுள்ளார். இதை பார்க்கும் போது தென் சென்னை தொகுதியை பாஜக குறி வைப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. தென் சென்னை தொகுதியை குறி வைத்தே குஷ்பு தேர்தல் வேலையில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு ஜெயவர்தனும், பாஜகவுக்கு குஷ்புவும் முக்கியமானவர்கள் என்பதால் இந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications