30 x 400.. குவார்ட்டர் + பிரியாணி, ரூ.12,000.. உரிமைதொகை 1000.. கம்பெனிக்கு 11,000.. ஓகேவா.. யாரிது?
சென்னை: உரிமைத்தொகை 1000 ரூபாய் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அந்தவகையில், உரிமைத்தொகையை பெற வேண்டுமானால், ஆன்லைனில் எப்படி கூலித்தொழிலாளியால் விண்ணப்பிக்க முடியும்? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.. இந்த தொகை யாருக்கெல்லாம் கிடையாது என்பதற்கு தமிழக அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த விதிமுறைகளுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு காட்டி வருகின்றன.. சில கட்சிகள் விமர்சித்தும் வருகின்றன.. "நாங்கள் பிச்சைக்காரியா இருக்கனும் அவ்வளவுதானே? இதெல்லாம் இருந்தால் நாங்கள் எதற்கு உங்களிடம் 1000 ரூபாய் கேக்க வேண்டும்? நிலம் இருக்கக்கூடாதது, வருமானம் இருக்கக்கூடாது என்று சொல்லி மக்களை அவமானப்படுத்தாமல் விட்டிருக்கலாம்" என்று சீமானும் சீறியிருந்தார்.
விமர்சனங்கள்: இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, 1000 ரூபாய் குறித்து விமர்சித்திருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:
"பெண்களுக்கு உரிமைத்தொகையாக 1000 ரூபாயை வழங்குறோம் என்று அப்பவே அறிவித்தார்கள்.. இந்த திட்டத்தை அவங்க அப்பாவின் பெயரில் வழங்குவதாகவும் சொன்னார்கள்.. 2 வருடமாக வழங்க முடியல.. 2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதால், அதை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று நினைத்துள்ளார்கள்.. இதற்காக அந்த திட்டத்தையும் தற்போது கொண்டுவந்திருக்கிறார்கள்.. ஆனால், 12 கண்டிஷன்கள் போட்டிருக்காங்க..
நலிவுற்ற மக்களுக்கோ, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கோ, அல்லது விளிம்பு நிலை பெண்களுக்கோ என்று இந்த தொகை வரையறுக்கப்படவில்லை.. 12 கண்டிஷன்களை போட்டுவிட்டு, அதற்கு உதவித்தொகை என்று பெயர் வைக்காமல், "உரிமைத்தொகை" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
டெபாசிட்: இப்ப நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், 1000 ரூபாயை வைத்துக்கொண்டு, வீட்டை நிர்வகித்து விடலாம், கடனை அடைச்சிடலாம்.. வீட்டை வாங்கிடலாம் என்றெல்லாம் அந்த பெண் கணக்கு போட்டுட முடியுமா?
இவங்க காசு ஒன்னும் சும்மா தரல.. மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள், உங்கள் வீட்டின் மூத்த அண்ணன். தன்னுடைய தங்கையின் வீட்டுக்கு வந்துவிட்டால் வெறுங்கையுடன் திரும்பி செல்லக்கூடாது என்பதால், 1000 ரூபாயை, அந்த பெண்ணின் கையில் தந்து வீட்டு செலவுக்கு வைத்து கொள்ளுமாறு சொல்கிறார். அத்துடன் கணவனின் வருமானத்தை நீ எப்பவுமே எதிர்பார்க்கவே கூடாது என்றும் சொல்கிறார்..
இந்த உரிமைத்தொகையின் நுட்பம் என்னவென்றால், கணவனின் முழு சம்பளம், இந்த தமிழ்நாட்டு வருவாயாக வரவேண்டும். அதனால், அந்த சம்பளத்தை நீ எதிர்பார்க்க படாது என்பதே.
கணக்கு: ஒரு குவார்ட்டர் + கோழி பிரியாணி + சைட்டிஷ் + கப் = இதெல்லாம் சேர்த்து 400 ரூபாய் ஆகிறது. இதை அரசாங்கத்துக்கு தருகிறார்கள்.. 30 x 400 எவ்வளவு ஆகுது? மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் வருகிறதா? இந்த 12 ஆயிரம் ரூபாயை நம்ம கிட்ட இருந்து புடுங்கிட்டு, மாசம் 1000 ரூபாய் மட்டும் உங்களுக்கு தர்றாங்க.. மிச்சம் 11 ஆயிரம் கம்பெனிக்கு லாபம்.. இதுக்கு பேரு உரிமைத்தொகை..
ஒருவேளை நானும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துடுவேன் போல.. என்கிட்ட சொந்தமா கார் இல்லை, உருப்படியா ஒரு வீடும் இல்லை..
இதுல எல்லாரும் போய், ஆன்லைன்ல விண்ணப்பிக்கணுமாம்.. பேசாமல், ஓட்டையும் அதுலயே போட சொன்னால், நாங்களும் போட்டுருவோம் இல்லை?
ஆன்லைன்: ஒரு கிராமத்தில் இருக்கக்கூடிய விவசாய பெண்மணி, அல்லது சித்தாள் வேலைக்கோ, கொத்தனார் வேலைக்கோ, கல்லு தூக்கவோ, மண்ணு தூக்கவோ போகும் நபர்கள், ஆன்லைனில் என்ன செய்வார்கள்? 100 நாள் வேலை திட்டம் என்று ஒன்று கொண்டுவந்திருக்கீங்களே, அதில் நீங்க போடும் பணத்தைகூட, வங்கியில் சென்று சலான் நிரப்பி அவர்களால் எடுக்க தெரியல. அதுக்கு 100 ரூபாய் லஞ்சம் தந்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்கள், ஆன்லைனில் போய் விண்ணப்பிக்கணுமாம்..
அதுவும் ஒரு கோடி பெண்களுக்கு மட்டும்தான் இதுக்கு உரிமை இருக்காம்.. மற்ற அம்புட்டு பேரும் தெருவுல நிக்கணும்.. இவங்க திட்டங்கள் எல்லாமே இப்படித்தான் வரையறுக்கப்படுகிறது. "10 ரூபாய் பாலாஜி"யின் ஊழலை, அப்படியே இந்த 1000 ரூபாய் மேட்டரை வைத்து மூடிமறைத்து விட்டார்கள்.
எடப்பாடி சித்தப்பா: இந்த உரிமைத்தொகை திட்டம்தான் இப்படி பல்லை காட்டி இளிக்குதுன்னா, எடப்பாடி சித்தப்பா வேற வெலலில் இருக்காரு.. 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் ஒரு திட்டத்துக்கு, 1100 கோடிகளை ஒதுக்கியிருக்காரு.. எப்படி பார்த்தாலும், அந்த கணக்கு சரியா வரலயே.. கூட்டி கழிச்சு பார்த்தாலும் கணக்கு இடிக்குதே.
இப்படி லஞ்சம் வாங்குபவர்களுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும் இந்த ஆட்சி அதிகாரத்தை மாறி மாறி கொடுத்துவிட்டு, நல்ல அரசாங்கம் அமையல, எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கல என்றெல்லாம் புலம்பி என்ன பலன்? இப்போது குமுறல்கள் அதிகம் கேட்கின்றன.. அதுவும் இந்த சமூக நீதி இருக்கே? திமுகவின் சமூகநீதியை, எங்கியாவது சந்துபொந்துலதான் போய் தேடணும்" என்றார் காளியம்மாள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications