Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது.. மின்வாரியம் என்ன செய்ய போகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதை மின்சார வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால் உண்மையில் அரசின் மின் இணைப்புகள் ஒருங்கிணைக்கும் பணியால் சிலருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளது. யாருக்கெல்லாம் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் தமிழக அரசு குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை மற்றும் விவசாயம் என ஒவ்வொரு வகையான மின் இணைப்புகளுக்கும் ஒவ்வொரு வகையான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் வீட்டு மின் இணைப்புகளை பிரிவு-1ன் கீழ் வகைப்படுதப்பட்டுள்ளது. இதில் 1ஏ-பிரிவில் (அதாவது வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள்) மின் இணைப்பு பெற்றவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது..

Who will not get 100 units of free electricity in Tamil Nadu TN EB Explain

இந்நிலையில் சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை திட்டவட்டமாக மறுத்த மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும் விளக்கம் அளித்தது.

அதாவது தெளிவாக சொல்வது என்றால், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்தது.

மின்வாரியம் கடந்த 2 நாட்களாக ஒரு வீட்டில் இருக்கும் பல மின் இணைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்றால், "ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு ஒரு மின் இணைப்பு இருக்கலாம். ஆனால் இந்த விதிமுறைகளை மீறி ஒரு வீட்டில் இருக்கும் ஒரு குடும்பம் மட்டும் 2 அல்லது 3 மின் இணைப்புகளை பெற்று இருப்பார்கள்.

அதாவது முதல் மாடிக்கு தனி மின் இணைப்பு, இரண்டாவது மாடிக்கு தனி மின் இணைப்பு. வீடுகளை இரண்டாக பிரித்து தனி மின் இணைப்பு என தனித்தனி மின் இணைப்பு பெற்றிருப்பார்கள். அதாவது கூட்டுக்குடும்பமாக வசிப்பவர்கள் தனித்தனியாக ஒருவர் பெயரிலேயே மின் இணைப்பு வாங்கி இருப்பார்கள். இப்போது இந்த மின் இணைப்புகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

அதாவது, ஒரு மின் இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் 1ஏ பிரிவில் வரும். மற்ற இணைப்புகள் எல்லாம் 1-இ பிரிவின் கீழ் இனி வந்து விடும். இந்த பிரிவில் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.50 ஆகும். இந்த பிரிவு இணைப்பிற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது.

அதேபோல் வாடகை வீடுகள் அல்லது லீஸ் வீடுகளை பொறுத்தவரை,. ஒரு வீட்டிற்குள் 10 காம்பவுண்டு வீடுகள் வரை கூடஅமைந்திருக்கும். இவை ஒவ்வொன்றிலும் வெவ்வெறு குடும்பங்கள் வசிக்கும். இவர்களுக்கு தனித்தனியாக மின் இணைப்பு இருக்கும். அந்த மின் இணைப்புகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்படாது.வாடகை அல்லது லீஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் போல 1ஏ பிரிவின் கீழ் தனித்தனி மின் இணைப்புகள் தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களுக்கு வழக்கம்போல முதல் 100 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும்.

அதே வேளையில் 10 குடும்பங்கள் தனித்தனியாக இருக்கும் காம்பவுண்டு வீடுகளில் 10 மின் இணைப்புக்கு பதிலாக மொத்தம் 11-வது மின் இணைப்பு வைத்திருப்பார்கள். கூடுதலாக இருக்கும் இந்த ஒரு மின் இணைப்பு பொதுவான விளக்கு மற்றும் நீர் மோட்டாருக்கு பயன்படுத்தப்படும். இந்த 11-வது மின் இணைப்புக்கு தற்போது 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். இது இலவச மின்சார பிரிவான 1ஏ பிரிவின் கீழ் இருந்தால் உடனடியாக அது 1டி பிரிவின் கீழ் கொண்டு வரப்படும். அதில் ஒரு யூனிட் கட்டணம் ரூ.5.50 ஆகும். மேலும் இந்த பிரிவில் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது. இதனை ஒருங்கிணைக்கும் பணிகளைத்தான் அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகிறார்கள்.

இதனிடையே இந்த விவகாரத்தால் யாருக்கு பாதிப்பு என்றால், கூட்டுக்குடும்பமாக இருந்து கொண்டு ஒரே வீட்டில் ஒருவர் பெயரிலேயே ஒன்றுக்கும் மேல் மின் இணைப்பு வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வாடகை வீடுகளை பொறுத்தவரை பிரச்சனை இல்லை.. வாடகை வீடு என்றால், அந்த வாடகை வீட்டில் யாராவது குடியிருக்க வேண்டும்.. வாடகை ஒப்பந்தத்தை காட்ட வேண்டும் அப்படி என்றால் மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.. அடுக்குமாடி வீடுகளை பொறுத்தவரை பொது மின் இணைப்புகளுக்கு (மோட்டார், லைட் இணைப்பு) இனி இலவசமாக 100 யூனிட் மின்சாரம் கிடைக்காது. இதனிடையே இந்த விவகாரத்தில் அரசு தெளிவான எழுத்துப்பூர்வமான உத்தரவினை மின் ஊழியர்களுக்கு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+