சென்னை அம்பத்தூர் பெண் சப் இன்ஸ்பெக்டரின் தவறான முடிவு.. தாயை இழந்த 10 வயது, 8 வயது மகன்கள்
சென்னை: சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக அந்தோணி மாதா என்பவர் வேலை செய்து வந்தார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு, யோவான் என்பவருடன் 2015-ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கணவரை பிரிந்து வாழும் அந்தோணி மாதாவுக்கு மற்றொரு ஆண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட ஆண் சப் இன்ஸ்பெக்டர் பேசுவதை குறைத்துக்கொண்டாராம். அதற்காக அவர் எடுத்த முடிவால் பிள்ளைகள் பரிதவிக்கிறார்கள்.
கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்கள் அல்லது கணவனை இழந்த பெண்கள், இன்னொரு துணை தேடும் போது, மனவருத்தங்கள், தவறுகள் அல்லது ஏமாற்றத்தை அதிகம் சந்திக்கிறார்கள். அப்படி சந்திக்கும் ஏமாற்றத்தை அவர்களால் ஏற்க முடிவது இல்லை. அதனால் தங்களுக்கு பிரியமான குழந்தைகளை பற்றி கூட யோசிக்காமல் வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் சென்னை அம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி மாதாவிற்கு 31 வயது ஆகிறது. இவர் சென்னை அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு யோவான் என்பவருடன் (2015-ம் ) ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அந்தோணி மாதா, கணவரை பிரிந்து அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். சப்-இன்ஸ்பெக்டராக தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
தற்போது 3 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த அந்தோணி மாதா, அவருடன் பணியில் சேர்ந்த மற்றொரு ஆண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் பழகி உள்ளார்.. கடந்த 2 வருடங்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்தோணி மாதாவிடம் பேசுவதை அந்த சப்-இன்ஸ்பெக்டர் குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தோணி மாதா மிகுந்த மன வருத்தத்தில் இருந்தாராம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தோணி மாதா, அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போனில் வீடியோ காலில் பேசியிருக்கிறார். உடனடியாக தன்னை பார்க்க வரும்படி கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். அதற்கு அந்தோணி மாதா, "என்னை பார்க்க வரவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்" என கூறினாராம். ஆனால் அடிக்கடி அவர் இதுபோல் மிரட்டி வந்தாராம். அதனை சப்-இன்ஸ்பெக்டர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. உடனடியாக செல்போன் இணைப்பை துண்டித்து விட்டாராம்,
எனினும் சிறிதுநேரம் கழித்து அவர், அந்தோணி மாதாவுக்கு போன் செய்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக அந்தோணி மாதா வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்தோணி மாதா தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டதை கண்டு ஆடிப்போனார்கள்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது தாயும் வாழ்க்கையை முடித்துக கொண்டதால் அவரது 2 மகன்களும் தவித்து வருகிறார்கள். இது சக போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications