சைலண்ட் ஆக்ஷனில் திமுக.. ஸ்பீடு எடுத்த உட்கட்சி தேர்தல்.. சென்னை வட்ட செயலாளர் பதவிக்கு செம போட்டி
சென்னை திமுகவில் வட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது
சென்னை: சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிற திமுக வட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் வெடித்து வரும்நிலையில், மற்றொருபுறம் திமுக சைலண்ட்டாக தன்னுடைய உட்கட்சி தேர்தலை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது... பிறகு பேரூர் கழகம், ஒன்றிய கழகங்களுக்கும் தேர்தலும் முடிந்துவிட்டது...

விருகம்பாக்கம்
இப்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள பகுதி கழகங்களுக்கு தேர்தல் நடந்து வருகிறது... இதில், சென்னையில் வட்ட கழக செயலாளர் பதவிக்கு நேற்று முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது... சென்னை தெற்கு மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்தம் 82 வட்டச்செயலாளர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.. இதில் மதுரவாயல் தொகுதியில் நேற்று தேர்தல் முடிந்து விட்டது. இன்று சோழிங்கநல்லூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது... அதேபோல, விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள 13 வட்டச்செயலாளர் பதவிக்கு 8-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

மயிலாப்பூர்
தெற்கு மாவட்டத்தில் 9-ந் தேதி வரை தேர்தல் நடக்கும் என்று மாவட்ட செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.. தி.நகர் தொகுதியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 14 வட்ட செயலாளர் பதவிக்கு நாளைய தினம் தேர்தல் நடக்கிறது.. மயிலாப்பூர் தொகுதிக்கு 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது.. அண்ணாநகரில் உள்ள 14 வட்டத்துக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது.. ஆயிரம் விளக்கு தொகுதியில் நாளையும், சேப்பாக்கம் தொகுதிக்கு நாளை மறுநாளும் தேர்தல் நடைபெறுவதாக மாவட்டச்பொறுப்பாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

பெரிய வார்டு
சென்னை கிழக்கு மாவட்டத்தை பொறுத்தவரை, அம்பத்தூர் தொகுதியில் உள்ள 15 வட்ட செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.. இங்கு 6-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே மாவட்ட செயலாளரும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு அறிவுறுத்தியிருந்தார்.. ஒரு வார்டுக்கு 2 வட்ட செயலாளர் பதவி வரும் வகையில் பிரிக்கப்பட்டு உள்ளது.. ஒருவேளை பெரிய வார்டாக இருந்தால் 3 வட்டச் செயலாளர் என்ற ரீதியில் பதவி பிரிக்கப்பட்டுள்ளது.

முட்டி மோதுகிறார்கள்
வட்ட செயலாளர் பதவி என்பது, கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும்.. கட்சியின் கூட்டங்களை நடத்துவது முதல், அதற்கான ஏற்பாடுகள் செய்வது வரை அனைத்திலுமே வட்டசெயலாளர்கள் தவிர்க்க முடியாதவர்கள்.. பலம்பொருந்திய இந்த பதவியை பெறுவதற்கு எப்போதுமே, திமுக, அதிமுகவில் கடும் போட்டி இருக்கும்.. அந்தவகையில் திமுகவில் இப்போதும் இந்த போட்டிக்கு முட்டிக் கொண்டு இருக்கிறார்கள்..
Recommended Video

கடும் போட்டி
அதாவது ஒரு வட்ட செயலாளர் பதவியை 10 பேர் வரை கேட்கிறார்களாம்.. எனவே, தேர்தல் நடத்தாமல் சமரசம் செய்து ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டதால், அனைவரையும் சமரசம் செய்து, அதன்பிறகு ஒருவரை நியமிக்கின்றனர்... வட்ட செயலாளர் பதவி தேர்தல்கள் 9-ந் தேதியுடன் முடிந்த பிறகு, பகுதி செயலாளர் தேர்தல் சென்னையில் நடத்தப்படும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications