தமிழ்நாட்டில் வெல்லப்போவது யார்? திமுகவை நெருங்கும் அதிமுக வாக்கு வங்கி! பாஜக வாக்குகள் கூடுதே!
சென்னை: தமிழ்நாட்டில் வெற்றி பெறப்போவது யார்? அதிக வாக்குகள் யாருக்கு? என தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி திமுக தலைமையில் களம் இறங்குகிறது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தந்தி டிவி, கடந்த மே 2023 ஆம் ஆண்டு முதல் பல தரப்பட்ட மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்புகள் பிப்ரவரி மாதம் 2024 முடிவடைந்தது. அந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:
உங்கள் தொகுதியில் வெற்றி பெறப்போவது யார்?
திமுக கூட்டணி - 43%
அதிமுக கூட்டணி 33%
பாஜக கூட்டணி - 12%
நாம் தமிழர் கட்சி - 8%
மற்றவை - 4%
உங்கள் தொகுதியில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?
திமுக கூட்டணி - 42%
அதிமுக கூட்டணி 30%
பாஜக கூட்டணி - 13%
நாம் தமிழர் கட்சி - 8%
மற்றவை - 7%
கடந்த 2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
திமுக கூட்டணி - 53.15%
அதிமுக + பாஜக கூட்டணி 30.57%
நாம் தமிழர் கட்சி - 3.89%
அதாவது, 2019 தேர்தல் ரிசல்ட்டுடன் ஒப்பிடும்போது இந்த முறை, திமுக கூட்டணிக்கான வாக்கு சதவீதம் குறைவதாகவே தெரிகிறது. கடந்த தேர்தலில் 53.15 சதவீத வாக்குகளை திமுக - காங்கிரஸ் கூட்டணி அள்ளி இருந்த நிலையில், தந்தி டிவி கணிப்பில் 42% மக்களே திமுக அணிக்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை, அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக நின்றிருந்த நிலையில் 30 சதவீத வாக்குகள் பெற்றன. ஆனால், இப்போது அதிமுக கூட்டணி தனியாக 30% மற்றும் பாஜக கூட்டணி தனியாக 13% வாக்குகளைப் பெறுகிறது. இதன் மூலம், அதிமுக பாஜக அணிகள் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கு நிகரான வாக்குகளைப் பெறுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications