புஸ்ஸாயிடுச்சு.. பாஜகவின் மெகா செக்.. பெரம்பலூரில் "சிங்கம்" களமிறங்குது.. திமுக உஷாராகணுமே? அதிமுக?
சென்னை: பாஜக கூட்டணி ஓரளவு வலுவாகி கொண்டிருக்கிறது.. அக்கூட்டணியிலுள்ள கட்சிகளும் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து சில தகவல்களும் வட்டமடிக்கின்றன.
அதிமுக கூட்டணி இன்னும் வலுவாகவில்லை.. இப்போதைக்கு திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது.. ஆனால், இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.

அதேபோல பாஜகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறது. கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவதற்குள், கூட்டணியை முடிவு செய்து, கூட்டணி கட்சித் தலைவர்களை பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஒன்றாக மேடை ஏற்றிட வேண்டும் என்று பாஜக பெரிதும் முயன்றது.
கூட்டணி: ஆனாலும், ஓரளவு மட்டுமே கூட்டணியில் வெற்றி அடைந்துள்ளது.. ஓபிஎஸ் + தினகரன் + பாரிவேந்தர் + ஏசி சண்முகம் + ஜி கே வாசன் - என கிட்டத்தட்ட கூட்டணியை தயார் செய்துவிட்டது. அந்தவகையில், அதிமுகவைவிட ஒரு படி தமிழக பாஜக வேகம் எடுத்துள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது..!
இப்படி ஒரு கூட்டணிக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது பாரிவேந்தர்தான்.. கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டவர்.. வரப்போகும் தேர்தலில் பாஜகவுக்கான ஆதரவை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பேயே வழங்கிவிட்டார்.. உதயசூரியன் சின்னத்தில் இருந்துக்கொண்டே, திமுகவையும் விமர்சிக்க துவங்கி விட்டார்.
கல்வி நிறுவனங்கள்: இப்படி திடுதிப்பென்று பாஜகவுடன் கூட்டணி வைக்க சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. அதனால்தான் தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு..
ஐஜேகவுக்கு சீட் தருவதாக பாஜக உறுதி தந்தது ஒருபக்கம் இருந்தாலும், பாஜகவுக்கு யார் சீட் தரப்போகிறார்கள்? எவ்வளவு சீட் தரப்போகிறார்கள்? என்பது தெரியவில்லை.
பாரிவேந்தர்: இதே பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தரும் போட்டியிட போவதாக தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன.. காரணம், இந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பாரிவேந்தர் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.. அதனால்தான், பெரம்பலூரையே இந்த முறையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக மேலிடத்திடம் கோரிக்கை வைக்க, அதற்கு மேலிடமும் ஓகே சொல்லிவிட்டதாக செய்திகள் கசிந்தன.
பெரம்பலூர் அல்லாமல் மேலும் 2 தொகுதிகளில் போட்டியிட பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் தொகுதி மட்டும் உறுதியாகி உள்ளதால், மற்ற 2 தொகுதிகள் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை முடிவாகவில்லை என்கிறார்கள்..
கள்ளக்குறிச்சி: ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதியில் பொதுச்செயலாளரர் ஜெயசீலன், தென் சென்னையில் மற்றொருவர் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.. எனவே, இந்த 2 தொகுதிகள் உறுதியானபிறகு, முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பாரிவேந்தர் பேசும்போது, "2014 முதல் மோடியுடன் தொடர்பில் இருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சி தொடர வேண்டும். அவர் 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அது நடக்கத்தான் வேண்டும். உலகளவில் இந்தியர்களுக்கு மரியாதை இருக்கிறது என்றால் அது பிரதமர் மோடியால் தான்.. பாஜகவுடன் நாங்கள் இணக்கமாக உள்ளோம்'' என்று கூறியிருக்கிறார்.
உதயசூரியன்: பாரிவேந்தரின் இந்த பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. 2014 முதலே மோடியுடன் தொடர்பில் இருக்கிறோம், பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறோம் என்றால், எதுக்காக திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறை போட்டியிட வேண்டும்? என்று நெட்டிசன்கள் பாரிவேந்தரை கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. இதுக்கு பாரிவேந்தரின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரியலியே.. பொறுத்திருந்து பார்ப்போம்!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications