யாருக்கா இந்த அறிவாளி?... இந்த கொசு தொல்லை தாங்க முடியல.. தமிழிசைக்கு உதயநிதி முன்வைத்த கேள்வி
சென்னை: யாருக்கா இந்த அறிவாளி, இந்த கொசு தொல்லை தாங்க முடியல என பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைவர்களின் வாரிசுகள் அக்கட்சியில் பதவி வகிப்பதை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பாஜகவின் மாநில இளைஞர் அணி துறைத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்தார்.
அதில் அவர் கூறுகையில் பாஜகவில் உள்ளவர்கள் எந்த வித பரிந்துரையும் இன்றி தலைவர்களானவர்கள். எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் அப்படிதான்.

கட்டுப்படுத்தவில்லை
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மாதிரியோ ராஜீவ், சோனியா, ராகுல் மாதிரியோ குடும்பத்தினர் வந்து பாஜகவை கட்டுப்படுத்தவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

பதிலடி
திமுக அறக்கட்டளையின் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி கோடான கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறார். அவரை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த குற்றச்சாட்டு புதியதுதான் என சூர்யா தெரிவித்திருந்தார்.

மோசமான தண்டனை
இதற்கு உதயநிதி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் திமுக அறக்கட்டளையின் அறங்காவலர் என நீங்கள் நிரூபித்துவிட்டால் நான் உங்கள் மோடியின் முன்னிலையில் பாஜகவில் சேர்வது என்ற கடுமையான, மோசமான தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் என உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.

சளைக்காமல்
இதற்கு பதிலளித்த சூர்யா, நீங்கள் நிர்வாக மேலாண்மை இயக்குநராக இருந்தால் முரசொலி அறக்கட்டளையின் பைலாவை படித்து காண்பிக்க முடியுமா என கேட்டிருந்தார். இதற்கும் உதயநிதி சளைக்காமல் பதிலளித்திருந்தார்.
|
பைலா
உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சூர்யா உங்களுக்கு நிர்வாகத்திற்கும் அறங்காவலருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. முரசொலி அறக்கட்டளையின் பைலாவை படிக்க நீங்கள் எப்போதும் வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் மட்டுமில்லை, யார் வேண்டுமானாலும் வரலாம்.

கொசுத் தொல்லை
இனி உங்களுடைய அர்த்தமற்ற கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன். தமிழிசை அக்கா யாருக்கா இந்த அறிவாளி ? தயவு செய்து சொல்லுங்கள்! இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியல என கிண்டலாக பதில் அளித்திருந்தார் உதயநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications