அடடா அந்த 2 பேரா.. ரொம்ப கஷ்டமாச்சே! அண்ணாமலையை வளைத்த திமுகவின் "மாஸ்டர்மைண்ட்ஸ்".. மாட்டிகிட்டாரே?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக சார்பாக இரண்டு முக்கியமான தலைவர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். அந்த இரண்டு பேர்தான் தற்போது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். மெட்ரோ ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக ஆதாரம் எதையும் வெளியிடாமல் புகார் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.
இந்த மெட்ரோ முறைகேட்டிற்கு மெட்ரோ நிர்வாகவும், தமிழ்நாடு அரசும் பதில் சொல்லிவிட்டது. இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ். பாரதி பேட்டி அளித்தார்.
அவர் ரபேல் பில்லை காட்டவில்லை.. வெறுமனே சீட்டு ஒன்றை காட்டி உள்ளார். அவர் காட்டியது பில் கிடையாது. ஜெகத்ரட்சகனிடம் இவ்வளவு சொத்து என்று சொல்லி இருக்கிறார். அவர் என்ன பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறாரா? அவர் பல காலமாக தொழில் அதிபர்.
எங்கள் மீது பல புகார்களை வைக்கிறார். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? அந்த ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்களேன்? மோடி, நிர்மலா சீதாராமன் நினைத்தால் இதில் நடவடிக்கை எடுக்கலாமே. அண்ணாமலை என்ன மோடி மீது குற்றச்சாட்டு வைக்கிறாரா? என்ன இது? அவர் இப்படி பேசலாமா?

அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை புகார் வைத்து இருக்கிறார். 2006-2011 ஆட்சியில் மெட்ரோ பணியில் ஊழல் என்று கூறி உள்ளார். 2014ல் இருந்து மோடி தானே ஆட்சியில் இருக்கிறார்.
பாஜக தானே மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்த காலத்தில் ஏன் மோடி திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை? சிபிஐ ஏன் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வேண்டும் என்றால் நடவடிக்கை எடுத்து இருக்கலாமே?
அப்படி எடுக்க தவறி இருந்தால் மோடி, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை. அவர் மீது கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார்., என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில்தான் திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் அண்ணாமலைக்கு எதிராக திமுக சார்பாக 2 முக்கியமான தலைகள் களமிறக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அமைப்புச்செயலர் ஆர்எஸ் பாரதி, வழக்கறிஞர் எம்பி வில்சன் இரண்டு பேரையும் திமுக களமிறக்கி உள்ளதாம்.
இரண்டு பேருமே சட்ட ரீதியாக தீவிர அறிவு பெற்றவர்கள்.. ஆர்எஸ் பாரதி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல காரணம் ஆனவர். எம் பி வில்சன் மருத்துவ மேல்படிப்பில் எம்பிசி இடஒதுக்கீடு தொடங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்க வழக்கு தொடுத்தது வரை பல முக்கிய வழக்குகளில் கவனிக்கப்பட்டவர்.

இவர்கள் இருவரும்தான் தற்போது அண்ணாமலைக்கு எதிராக களமிறக்கப்பட்டு உள்ளனர். நேற்று அண்ணாமலைக்கு எதிராக ஆர்எஸ் பாரதி டீம் அனுப்பிய நோட்டீஸில், மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 2021-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் மே மாதம் ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அயராது உழைத்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் சிறந்து விளங்கி நாட்டின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் நீங்களும் உங்கள் கட்சியும் முத்திரை பதிக்க முடியாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள்.
'DMK Fies' என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தீர்கள்.
திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுக கட்சிக்கு மொத்தம் ரூ.1408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும்.
திமுகவினருக்குச் சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ. 3474.18 கோடி,
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ. 34,184.71 கோடி என்பது
பொய்யானது.
ஒருவர் திமுகவின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது.
2018 மார்ச் முதல் 2022 வரை கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ.9,208 கோடி. அதில், பாஜகவுக்கு மட்டுமே ரூ.5,270 கோடி சென்றுள்ளது. இதுவும் முறைகேடாக பெறப்பட்டது என்று கூறமுடியுமா?
முதல்வர் பண மோசடியில் ஈடுபடவே துபாய் சென்றதாக, முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை.

2006-11 ஆட்சியில் அமைச்சராக இருந்த ஸ்டாலின்,சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத்துக்கு அளிப்பதற்காக ரூ.200 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியுள்ளீர்கள்.
அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இத்திட்டத்தை தொடர்ந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இத்திட்டத்தை, மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். பின்னர், இதன் விரிவாக்கத்தை அப்போதைய முதல்வர் பழனிசாமி முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தற்போது 2-ம் கட்டப் பணிகளுக்கும் அதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உங்கள் கூட்டணி கட்சியான அதிமுகவும், பிரதமர் மோடியும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறீர்களா?
உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள், இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோவை நீக்கவேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும்.
அது முதல்வர் பொது நிவாரண நிதிக்கு செலுத்தப்படும். இந்த அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும், என்று கூறப்பட்டு உள்ளது.
-
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!












Click it and Unblock the Notifications