கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்!
சென்னை : இன்று நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 பேர் மட்டுமே பங்கேற்கவில்லை என்றும், பங்கேற்காதவர்கள் கடிதம் அளித்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மொத்தமுள்ள 74 பேரில் 65 பேர் பங்கேற்றுள்ளனர். 4 பேர் வராத காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தலைமை கழக நிர்வாகிகள்
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் மிகத் தீவிரமாக நிலவி வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார். இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி பங்கேற்பில் நடந்தது. தனது கையெழுத்து இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்படும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

ஓபிஎஸ்ஸூக்கு எதிராக
இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்கனவே காலாவதியானதாக ஈபிஎஸ் தரப்பினர் கூறிய நிலையில், பொருளாளர் பதவியில் இருந்தும் அவரை நீக்கவிருப்பதாக கூறப்பட்டது. மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

ஜெயக்குமார்
இன்று நடைபெற்ற அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவை வழிநடத்த சட்ட விதிகளின்படி தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை கூட்டினார். 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் இந்த தலைமைக் கழக கூட்டத்திற்கு வர முடியவில்லை என்று கடிதம் அளித்திருக்கிறார்கள்.

கலந்து கொள்ளவில்லை
பண்ருட்டி ராமச்சந்திரன், புத்திசந்திரன், ஜஸ்டிஸ் செல்வராஜ் ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வரவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். திண்டுக்கல் சீனிவாசன் தான் மருத்துவமனையில் இருப்பதால் கூட்டத்திற்கு வர முடியவில்லை எனக் கடிதம் அளித்துள்ளார். இப்படியாக 5 பேர் மட்டுமே இந்த தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை." எனத் தெரிவித்தார்.

என்ன ஆலோசனை?
மேலும், வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பொருளாளர் பதவியில் ஓ பன்னீர்செல்வம் நிலைப்பாரா? இல்லையா? என்பது வரக்கூடிய பொதுக்குழு கூட்டத்தில் தெரியவரும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ்












Click it and Unblock the Notifications