ஒத்த சீட்டு கேட்ட ஆதவ் அர்ஜுனா.. முகத்தில் அடித்தார்போல் பேசிய எடப்பாடி! தவெகவுக்கு தாவியது இதனாலா?
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் வெளியேறிய ஆதவ் அர்ஜுனா விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், முன்னதாக கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மூலம் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆதாவ் அர்ஜுனா அதிமுகவில் சேர தான் முயற்சித்தார். ஆனால், அவரது 'டிமாண்டை' எடப்பாடி ஏற்காததால் தான் தவெகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன?
அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், 2024ன் இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே திமுகவுக்காக பணியாற்றியவர் ஆதவ் அர்ஜுனா. அவரது ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம் அதற்கு பிறகு வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமாக மாற்றப்பட்டது.

ஆதவ் அர்ஜுனா
அப்போது திமுகவுக்காக பிரச்சார வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே நான் தான் என ஆதவ் அர்ஜுனாவே கூறியிருந்தார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அவருக்கு உடனடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பல்வேறு விவகாரங்களை மூத்த நிர்வாகிகளுடன் பிணக்கு ஏற்பட்டதால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார.
அதிமுக
பின்னர் கட்சியில் இருந்து விலகிய அவர், அதிமுகவில் அவர் இணைவது உறுதி என அதிமுக சீனியர்கள் கூறி வந்தனர். ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைவதற்கு எடப்பாடி இடம் பேச்சுவார்த்தை நடத்தியவர் கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் எனவும் கூறப்பட்டது. இப்படியாக ஆதார் அர்ஜுனா அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின் போது இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தவெக விஜய்
ஆனால் திடீரென விஜயை அவர் சந்தித்து பேசியதோடு, சில நாட்களில் அக்கட்சியில் சேர்ந்தது அப்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனாவை கட்சிப் பணியிலும், தேர்தல் ஆலோசகராகவும் நியமிக்க விஜய் சம்மந்தித்ததாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதால் அவர் கட்சியில் சேர்ந்ததாக கூறப்பட்டது. அதே போல் ஆதவுக்கு சேர்ந்தவுடனேயே பதவியும் வழங்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
ஏற்கனவே அதிமுகவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஆதவ் அர்ஜுனா, விஜய் பக்கம் சென்றது குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடைசி வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியில் சேராமல் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தது ஏன் என்ற காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பேசிய அதிமுக மூத்த தலைவர் ஒருவர்," விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் ஆதவ் அர்ஜுனா முதலில் பேச்சு வார்த்தை நடத்தியது அதிமுகவிடம் தான்.
அதிமுக பேச்சுவார்த்தை
மாநில அளவிலான பொறுப்பு கேட்ட நிலையில் அதனை தரவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராகத்தான் இருந்தார். ஆனால் 2024 மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு ராஜ்ய சபா சீட் வழங்க வேண்டுமென ஆதவ் அர்ஜுனா எடப்பாடி இடம் வலியுறுத்தி கேட்டார். கட்சி பதவி தருவது என்றால் ஓகே அதுவும் துணை செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தான் வழங்க முடியும். சேர்ந்த உடனே ராஜ்யசபா சீட்டு கொடுத்தால் மற்ற சீனியர்கள் கோபித்துக் கொள்வார்கள். ஏற்கனவே 2021 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பலர் ராஜ்யசபா சீட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ராஜ்யசபா சீட்
அவர்களுக்கு தராமல் உங்களுக்கு தந்தால் பிரச்சனை வரும் வேண்டுமென்றால் லோக்சபா சீட் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் லோக்சபா தேர்தலின் போது செலவுகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்க முடியாது. ராஜ்ய சபா சீட்டு தான் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதவ் அர்ஜுனா கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராஜ்யசபா சீட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறிய நிலையில் அதிருப்தி அடைந்த ஆதவ் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்து விட்டார்"என்றனர்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கயோ இடிக்குதே! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!











Click it and Unblock the Notifications