"விலாங்கு மீன்".. திமுகவிலிருந்து நைஸா நழுவிருச்சே.. ஸ்டாலினுக்காக ஓடிவந்த கருணாஸ்.. அலர்ட் அதிமுக
சென்னை: அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் களமிறக்கப்பட உள்ள நிலையில், திமுகவில் நட்சத்திர பேச்சாளர்கள் யார் யார் என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
கடந்த 2011 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் செய்தவர் நடிகர் வடிவேலு.. ஆனாலும், அதிமுக அமோக வெற்றி பெற்றுவிட்டது..

பிரச்சாரம்: இதனால் தமிழக மக்களுக்கும், வடிவேலுவுக்கும் சேர்ந்தே "சிரிப்பு" அடங்கிப்போனது... படவாய்ப்புகளின்றி 10 வருடம் ஒதுங்கியிருக்கும் சூழலும் ஏற்பட்டது. பிறகு மாமன்னன் படம் மூலம், மீண்டும் 2-வது இன்னிங்ஸ் ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற வடிவேலு, "இதுகருணாநிதி சமாதி இல்லை, சன்னதி" என்று நெகிழ்ந்து சொன்னார்.. இதையடுத்து, திமுகவின் கூட்டங்களிலும் தென்படத்துவங்கினார். வடிவேலுவின் இந்த அதிரடிகளை பார்த்து, ஒருவேளை இந்த தேர்தலில் போட்டியிட போகிறாரா? திமுக வடிவேலுவை களமிறக்க போகிறதா? என்றெல்லாம் சந்தேகம் கிளம்பியது..
வடிவேலு: இதுபற்றி வடிவேலுவிடமே செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு வடிவேலு, "கலைஞர் ஐயா நினைவிடம் போனேன்.. திமுக மேடையிலும் பேசினேன்.. அதனால் திமுக சார்பில் நான் போட்டியிட போவதாக சொல்கிறார்கள்.. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது" என்றார்.
ஆனாலும், கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு வடிவேலுவின் இந்த திடீர் "திமுக" என்ட்ரி குழப்பத்தையே தந்து வருகிறது.. ஒருவேளை, வடிவேலுவை 2011 போலவே, பிரச்சாரத்துக்கு திமுக பயன்படுத்துமோ? என்ற சந்தேகமும் வலுவாகியது. இப்படிப்பட்ட சூழலில்தான், எதிர்பார்த்தபடியே, வடிவேலுவை தேர்தல் பிரச்சாரத்துக்கு திமுக தரப்பில் அழைத்தார்களாம்.
கருணாஸ் ஆதரவு: ஆனால், வடிவேலு அதற்கு பிடிகொடுக்காமல் நழுவிவிட்டாராம்.. பிரச்சாரத்தையும் தவிர்த்துவிட்டாராம்.. எனவே, நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் பக்கம் திமுகவின் கவனம் விழுந்துள்ளது..
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தன்னுடைய ஆதரவை கருணாஸ் வழங்கியிருந்த நிலையில், வடிவேலுக்கு பதிலாக கருணாசை பிரச்சாரத்தில் பயன்படுத்தவும் திமுக முடிவு செய்தது.. இந்த முடிவை கருணாஸும் ஒப்புக்கொண்டாராம்.
லிஸ்ட்டில் பெயர்: இப்போது, திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் லிஸ்ட்டில் 33-வது இடத்தில் கருணாஸ் பெயர் இருக்கிறதாம். 10 நாட்கள் கருணாஸ் பிரச்சாரம் செய்யக்கூடும் என்கிறார்கள். கருணாஸ் போலவே, நடிகர் போஸ் வெங்கட்டுக்கும் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்..
எனினும், அதிமுகவில் ஏகப்பட்ட நட்சத்திர வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.. குறிப்பாக டைரக்டர் உதயகுமார், ரங்கநாதன், அனுமோகன், லியாகத் அலிகான், ஜெயப்பிரகாஷ், அன்பழகன், மனோஜ்குமார், ஷக்தி சிதம்பரம், நடிகர்கள் சிங்கமுத்து, காதல் சுகுமார், ரவிமரியா, அருள்மணி, சரவணன், வையாபுரி, தியாகு, கஞ்சா கருப்பு, சவுந்தரராஜன், சுப்புராஜ், விஜய்கணேஷ், கிங்காங், குண்டுகல்யாணம், சுந்தர்ராஜன் ஆகியோர், பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய தயாராகி கொண்டிருக்கிறார்களாம்.
நட்சத்திர பட்டாளங்கள்: அதேபோல, கட்சியின் கொள்கை பரப்பு செயலரும், நடிகையுமான விந்தியா, நடிகையகள கவுதமி, காயத்ரி ரகுராம், எமி, ஜெயதேவி, கலா, பாத்திமா பாபு, பபிதா, ரஜினி நிவேதா, பசி சத்யா பாடலாசிரியர் முத்துலிங்கம் ஆகியோரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
அதிமுகவில் இப்படி இருக்க, திமுகவிலோ மிக குறைவான நட்சத்திரங்களே உள்ளனர்.. அதிமுகவின் நட்சத்திரங்களின் பிரச்சார வேகத்தை, கருணாஸ், போஸ் வெங்கட் போன்ற திரைப்பிரபலங்கள் ஈடுகட்டுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே 'சூடுபட்ட பூனை' வடிவேலு, இந்த முறை பிரச்சாரத்திலிருந்து நழுவிக்கொண்டது, அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது..!!
சூடுபட்ட பூனை: ஆனால், ஏற்கனவே ஒருமுறை பிரச்சாரம் செய்து, 'சூடுபட்ட பூனை' வடிவேலு, இந்த முறை கூப்பிட்டும்கூட நழுவிக்கொண்டதாக கூறப்படுவது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. ஒருவேளை வரப்போகும் சட்டசபை தேர்தலில் வடிவேலுவை வைத்து மிகப்பெரிய பிளானை திமுக முன்னெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்!!












Click it and Unblock the Notifications