ஸ்ட்ரிக்டா சைவம்.. விஜய் போட்ட ஆர்டர்! கல்வி விருது நிகழ்வு விருந்து பின்னணியில் "இப்படி" ஒரு காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்திப்பு பாராட்டி உதவித்தொகை வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு தடபுடலாக அறுசுவையுடன் கூடிய சைவ உணவு பரிமாறப்பட்ட நிலையில் அசைவ உணவு தவிர்க்கப்பட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக அரசியலுக்கு தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வருபவர் தான் நடிகர் விஜய். தமிழ்நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் இதுபற்றி நடிகர் விஜய் தரப்பில் இருந்து இன்னும் வெளிப்படையாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. ஆனாலும் அவரது ஒவ்வொரு நகர்வுகளும் அரசியலை நோக்கியே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் தான் சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி நிர்வாகிகளிடமும் தொகுதி பற்றிய முழுவிபரங்களை கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வெற்றி பெற்ற கட்சியின் பெயர் உள்பட பல்வேறு விபரங்களை விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மூலம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த விழா இன்று நடந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பெற்றோருடன் மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.
இந்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டு சான்று மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு பல ஆயிரம் பேருக்கு தடபுடலாக அறுசுவை விருந்து வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பேருக்கு 15 வகையான சைவ விருந்து அளிக்கப்பட்டது. 15,000 கிலோ காய்கறிகள் 900 கிலோ அரிசியில் விருந்து தயார் செய்யப்பட்டு இருந்தது.
காலை 3 மணியில் இருந்து 150க்கும் அதிகமான சமையல் கலைஞர்கள் இந்த அறுசுவை விருந்தை தயாரித்து வழங்கினர். மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அந்த உணவுகளை சுவைத்து சாப்பிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சாதத்துடன் ஆனியன் வெள்ளரி, தயிர் பச்சரி, இஞ்சி புளி துவையல், மாங்காய் ஊறுகாய், ஜம்ஜம் ஸ்வீட், பட்டாணி வறுவல் , சவ்சவ் கூட்டு, காலிபிளவர் பக்கோடா, ஆனியன் வடை, அப்பளம் மோர், அடை பிரதமன் பாயாசம், கதம்ப பருப்பு பொரியல், எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு, மாங்காய் மற்றும் முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
நடிகர் விஜய் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அசைவம் இன்றி சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது தான் நிகழ்ச்சிக்கு அசைவ உணவு தவிர்க்கப்பட்டதன் பின்னணி தகவல் வெளியானது. அதாவது இன்று அமாவாசை தினம் என்பதால் அசைவ உணவு தவிர்க்கப்பட்டதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications