"செம கடுப்பு".. யார் இந்த தட்சிணாமூர்த்தி.. ஒரே நாளில் ஃபேமஸ் ஆகி.. பரபரப்பை கிளப்பிட்டாரே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டார் தட்சிணாமூர்த்தி.. யார் இந்த தட்சிணாமூர்த்தி? அதிமுக, அமமுகவில் உச்சரிக்கப்பட்டு வரும் பெயர் இது..!

7 நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா திரும்பி வந்தார் இல்லையா? அப்போது, அதிமுக கொடி கட்டிய காரிலேயே பயணித்தபடியால், தமிழக எல்லைக்குள் வந்த அவருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

அதனால்தான், டக்கென்று தட்சிணாமூர்த்தியின் காரில் ஏறினார் சசிகலா.. இவர் திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர்.. அதிமுக நிர்வாகி என்பதால், அந்தக் காரில், அதிமுக கொடியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்பதால், கெத்தாக, கட்சி கொடியை பறக்கவிட்டு சசிகலா சென்னை வந்தார்.

சசிகலா

சசிகலா

ஆனால், சசிகலாவுக்கு கார் கொடுத்த தட்சிணாமூர்த்தியை அப்போதே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டார்.. இதற்கான உத்தரவை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் பிறப்பித்திருந்தனர்.

 தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

ஆனால், எதற்காக தட்சிணாமூர்த்தி கார் தந்தார் தெரியுமா? அதிமுக பிரமுகரான இவர் சசிகலாவை வரவேற்க காரை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கே போயுள்ளார்.. கர்நாடக எல்லையான ஜூஜூவாடிக்கு அருகே வந்தபோதுதான், தட்சிணாமூர்த்தியின் காருக்கு சசிகலா மாறியிருக்கிறார்.

 அதிருப்தி

அதிருப்தி

கட்சியில் வாரிசுகளுக்கு பதவி தருகிறார் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மாதவரம் மூர்த்தி மீது, தட்சிணாமூர்த்தி ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தாராம்.. அதுமட்டுமல்ல, செம்மரக்கடத்தல் புள்ளிகளின் ஆளுங்கட்சி புள்ளிகள் மாறி வருகிறார்கள் என்று ஸ்ட்ரைட்டாகவே அட்டாக் செய்து பேசினாராம்..

அமமுக

அமமுக

இதற்கான ஆதாரத்தையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்.. ஆனால், அது சம்பந்தமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை போலும்.. இந்த கடுப்பில்தான், சசிகலாவை வரவேற்க சென்று, அதற்கு பிறகு பரபரப்பாகிவிட்டார் என்கிறார்கள். இந்த சம்பவம் எதேச்சையாக நடந்தது என்றாலும், இவரை போலவே அதிருப்தியில் அதிமுகவில் உள்ளார்கள் என்று பார்த்து அவர்களுக்கு வலை வீச அமமுக தயாராகி வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+