எல்லோரும் காலி.. ‘அந்த ஒருத்தரை மட்டும் ஏன்?’ - ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சி அடையவைத்த சம்பவம்.. போச்சா!?
சென்னை : அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரை அதிரடியாக நீக்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி ஆர்.தர்மரை மட்டும் விட்டு வைத்துள்ளார்.
அ.தி.மு.கவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான, ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

அதிரடியாக நீக்கம்
ஜூலை 11-ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். நேற்று கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

மா.செக்கள் நீக்கம்
இந்நிலையில் இன்று இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ஓபிஎஸ் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மா.செ எஸ்.ஏ. அசோகன், திருச்சி மாநகர் மா.செ வெல்லமண்டி நடராஜன், தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் பெரம்பலூர் மா.செ ஆர்.டி.ராமச்சந்திரன், தஞ்சை வடக்கு மா.செ எம்.ஜி.எம். சுப்பிரமணியன் ஆகிய மாவட்ட செயலாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஓபிஎஸ்ஸின் மகன்கள்
மேலும், ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் இன்னொரு மகன் ஜெயபிரதீப், மற்றும் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட் துணை செயலாளர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரே ஒரு எம்.பி
அதிமுகவின் சார்பில் மக்களவையில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, அண்மையில் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்ற ஒரே ஒரு ஓபிஎஸ் ஆதரவு ராஜ்யசபா எம்.பியான ஆர்.தர்மரை கட்சியிலிருந்து இதுவரை நீக்கவில்லை. இது அரசியல் நோக்கர்கள் இடையே விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

ஆர்.தர்மர்
அதிமுகவின் நீண்ட கால உறுப்பினராக இருக்கும் ஆர்.தர்மர் தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாகவும் இருந்து வந்தார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தனது ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய சேர்மன் பதவிகளை ராஜினாமா செய்தார் தர்மர்.

தீவிர விசுவாசி
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியான ஆர்.தர்மருக்கு கடும் போராட்டங்களுக்கு மத்தியில் சீட் பெற்றுக் கொடுத்தார் ஓபிஎஸ். ஒருவகையில் இன்று அதிமுகவில் நிலவும் இந்த மோதல்களுக்கு தூபம் போட்டதே அந்த ராஜ்யசபா சீட் பிரச்சனைதான். அந்த ஆர்.தர்மர் கடந்த வெள்ளிக்கிழமை அன்றுதான் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கூண்டோடு நீக்கம்
இந்நிலையில், ஓபிஎஸ் உட்பட 4 பேர் பொதுக்குழு நடந்த அன்றே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஆதரவாளர்களான 18 பேர் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள், இந்நாள் எம்.பி. எம்.எல்.ஏக்களும் அடங்குவர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கப்பட்டிருந்தாலும், மாநிலங்களவை எம்.பி தர்மர் இன்று கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.

காரணம் என்ன
ஆர்.தர்மரை தங்கள் பக்கம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எதிர்கால நலன் கருதி ஆர்.தர்மர் ஈபிஎஸ் பக்கம் தாவத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த முக்கிய நிர்வாகிகள் நீக்கத்தில் ஆர்.தர்மரின் பெயர் இடம்பெறவில்லை எனக் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications