"கருணாநிதி" டவர் AC.. "சமாதிக்கு எதுக்கு ஏர்-கூலர்?.. கேட்கிறது யார் பாருங்க.. திரண்ட உடன்பிறப்புகள்
சென்னை: அதிமுகவின் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்டிற்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி வலுத்து கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
10 ஆண்டுகள் கழித்து, திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.. மெகா கூட்டணி வைத்து, பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று அரியணை ஏறியுள்ளது.. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது..

இப்போது திமுக அரசு தங்களது 2 ஆண்டுகளால ஆட்சியையும் நிறைவு செய்துள்ளது. இப்போது 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது..
ஈடில்லா ஆட்சி: இந்த 2 ஆண்டுகள் சாதனையை விளக்கும் வகையில் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்... அதனைத் தொடர்ந்து ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரையும் வெளியிட்டிருந்தார். திராவிட மாடல் ஆட்சி என்ற வாசகம் ட்விட்டரில் இரண்டாகி இருந்தது.
தமிழகத்தில் திமுக அரசு 2 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ததை தொடர்ந்து மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர். மேலும், திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வண்ண வண்ண பூக்கள்: இதையடுத்து, திமுக தலைவர்கள் ,திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் கருணாநிதி சென்று மரியாதை செலுத்தி வருவதால் கருணாநிதியின் நினைவிடம், "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற வாசகங்களுடன், வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது... அங்கே "டவர் ஏசியும்" வைக்கப்பட்டிருக்கிறது.

இதைதான் சீண்டி கிண்டலடித்துள்ளார் அதிமுகவின் சிடிஆர் நிர்மல்குமார்.. இவர் தமிழக பாஜகவின் முன்னாள் ஐடி விங் தலைவராக இருந்து, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர்.. தற்போது பதிவிட்டுள்ள அந்த ட்வீட்டில், இந்த படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.. அத்துடன் "சமாதிக்கு எதுக்கு டா ஏர்கூலர்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்..
இதற்கு பாஜகவினரும், அதிமுகவினரும் திரண்டு சென்று ஆதரவு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "கல்லாக உள்ள உங்கள் கடவுளுக்கு ஏன் மலர் மாலை? என்று சொன்னவரின் சிலைக்கு எதற்கு பூமாலை?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டவர் ஏசி : நிர்மல்குமாரின் இந்த ட்வீட்டை பார்த்ததுமே திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.. "வெயில் காலம் என்பதால் கடற்கரையில் வெப்பம் அதிகம் வரும்.. அதனால் பூ உடனே வாடும் ஏர் கூலர் வைத்தால் பூ வாடாமல் இருக்கும்... சமாதிக்கு உள்ளே வந்து பார்ப்பவர்களுக்கும், அலங்கரித்த மலர்கள் காயாமல் அதிக நேரம் இருப்பதற்காகவும் டவர் ஏசி வைக்கப்பட்டுள்ளது.. "அந்த ஏர்கூலர் சமாதிக்கு இல்லை .அங்கு அலங்கரிக்கப்பட்டுள்ள பூக்களுக்கு" என்று பதிலளித்து வருகின்றனர். மேலும் சிலர், "ஒரு சின்ன திருத்தம், அது ஏர் கூலர் இல்ல - டவர் AC" என்றும் காட்டமாக பதிலளித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications