சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கருணாநிதி பற்றி கவலைப்படலையே ஸ்டாலின்".. மோடிக்கு அழகிரி கடிதம் எழுதியதன் பின்னணி இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம் | திமுக சார்பில் விருப்ப மனு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு- வீடியோ

    சென்னை: பிரதமர் மோடிக்கு திடீரென மு.க.அழகிரி கடிதம் எழுதியதன் பின்னணி குறித்துத் தெரிய வந்துள்ளது.

    திமுகவில் இணைவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டும், ஸ்டாலின் தன்னை இணைத்துக்கொள்ளாமல் இழுத்தடிப்பதால் மு.க.அழகிரி தம்பி மீது உஷ்ணமாக இருப்பது ஊரறிந்த விஷயம்.

    இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்காக மதுரை வந்திருந்த பிரதமர் மோடியுடன் மு.க.அழகிரியை சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தமிழக பாஜக தரப்பில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அழகிரி அந்த முயற்சிக்கு பிடிகொடுக்காமல் மோடியை சந்திக்காமல் நழுவிக்கொண்டார்.

    எமெர்ஜென்சியில் கலைக்கப்பட்டது எம்ஜிஆர் ஆட்சியா, கருணாநிதி ஆட்சியா? மோடியே கன்ப்யூஷ் ஆகிட்டாரே எமெர்ஜென்சியில் கலைக்கப்பட்டது எம்ஜிஆர் ஆட்சியா, கருணாநிதி ஆட்சியா? மோடியே கன்ப்யூஷ் ஆகிட்டாரே

    சென்டிரலுக்கு எம்ஜிஆர் பெயர்

    சென்டிரலுக்கு எம்ஜிஆர் பெயர்

    இதனிடையே நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்துக்காக சென்னை வந்திருந்த மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயர் சூட்டினார். பெயர் சூட்டிவிட்டு மோடி சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லியில் இறங்குவதற்குள் மு.க.அழகிரி சுடச்சுட கடிதம் ஒன்றை தயார் செய்து அனுப்பி வைத்தார்.

    பாராட்டிய அழகிரி

    பாராட்டிய அழகிரி

    அதில், சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர்.பெயர் வைத்ததற்கு நன்றி என்றும், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறைந்த தலைவர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    திடீர் கடிதம் ஏன்

    திடீர் கடிதம் ஏன்

    திடீர் கடிதம் பற்றி அழகிரி ஆதரவு வட்டாரத்தில் விசாரித்த போது, கருணாநிதிக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அழகிரி ரொம்ப நாட்களாகவே ஆதங்கத்தில் இருந்து வந்ததாராம். இ

    ஸ்டாலின் பேச்சு

    ஸ்டாலின் பேச்சு

    இதனிடையே, தென்மண்டல மாநாடு என்ற பெயரில் ஸ்டாலின் தன்னை சீண்டியதையும் அழகிரியால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம். நேற்று விருதுநகரில் ஸ்டாலின் முழங்கியதை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும் என்பதற்காகவும், கருணாநிதிக்கு புகழ் சேர்க்கும் காரியங்களில் தனக்கு மிஞ்சி யாரும் இல்லை என்பதை திமுக தொண்டர்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காகவும், டெல்லிக்கு நேற்று அவசர ஓலை அனுப்பினாராம் அழகிரி.

    English summary
    Sources say that MK Alagiri wrote a letter to PM Modi to do little Stalin's attack in Viruthunagar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X