இதென்ன புது பழக்கம்! தமிழ்நாட்டில் குதிரை பால் விற்பனை அமோகம்! தேடி தேடி குடிக்கும் மக்கள்.. நல்லதா?
சென்னை: தமிழ்நாட்டில் திடீரென குதிரை பால் டிரெண்டாகி வருகிறது. பல ஆயிரம் கொடுத்து குதிரை பால் வாங்கும் வழக்கம் மக்களிடையே எழுந்துள்ளது.
முக்கியமாக திருச்சியில் குதிரைப் பால் விற்பனை சூடுபிடித்துள்ளது. திருச்சியில் உள்ள மணப்பாறை அடுத்த வாடிப்பட்டியில் குதிரைப் பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

அங்கே பாலசுப்ரமணியன் என்பவர் நாட்டுக்குதிரை இனங்களை மீட்டெடுக்க, வங்கிப் பணியை துறந்து குதிரை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒரு லிட்டர் ₹2,500-க்கு விற்கப்படும் பாலை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருச்சி மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க திடீரென குதிரை பால் டிரெண்டாகி வருகிறது. மக்கள் இடையே இதை வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
குதிரை பால் நல்லதா?: குதிரை பால் உடலுக்கு நல்லது என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கஜகஸ்தானின் Nazarbayev பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குதிரை பால் அழற்சி நோய்கள், காசநோய், இரத்த அழுத்தம் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும் என்று கூறியுள்ளனர்.
இன்று, காசநோய், இரத்த சோகை, நீரிழிவு நோய் மற்றும் அழற்சி மற்றும் தோல் நோய்களைத் தணிக்க குதிரை பால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், புளித்த குதிரை பால் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் புரதத்தை கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பாலின நோய்கள் தொடர்பான சிகிச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு போன்ற விஷயங்களுக்கு இந்த குதிரை பால் பயன்படுத்தப்படுகிறது.
நோய்களுக்கு குணம் அளிக்கும்: குதிரை பால் அதிக அளவு லாக்டோஸ் மற்றும் குறைக்கப்பட்ட கொழுப்பு மற்றும் கேசீன் போன்றவற்றை கொண்டது ஆகும்: ஒரு பால் புரதம், இது மனித உடல்கள் ஜீரணிக்க மற்றும் உறிஞ்சுவதற்கு கடினமாக உள்ளது. மேலும், பசுவின் பாலுடன் ஒப்பிடும் போது, குதிரையின் பாலில் அதிக அல்புமின் கொண்டு உள்ளது; அல்புமின் என்பது ஒரு புரதமாகும், இது கேசீனை விட மிக எளிதாக செரிக்கப்படுகிறது மற்றும் உறிஞ்சப்படுகிறது. உடலுக்கு மிக மிக நல்லது ஆகும்.
இது மனித உடலில் ஜீரணிக்கப்படும் போது, இந்த புரதங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளையும் கொடுக்கும் இதனால் உடலுக்கு பயன் அளிக்கும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குதிரை பால் தினசரி பயன்படுத்தினால் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது; பாலில் உள்ள கேசீன் மார்பக புற்றுநோய் உயிரணுக்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், வழக்கமான புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. புற்றுநோய் பக்க விளைவுகளையும் இது கட்டுப்படுத்தும்.
மனித பால் போன்றது: ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, குதிரை பாலின் கலவை கிட்டத்தட்ட மனித பாலை ஒத்திருக்கிறது, மேலும் இந்த ஒற்றுமை காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்தியில் குதிரை பால் பல நாடுகளில் முக்கியமாக உள்ளது. மாடுகள் குறைவாக உள்ள, குதிரைகள் அதிகமாக உள்ள கஜகஸ்தான் போன்ற நாடுகளில் குதிரை பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அங்கே உள்ளவர்களுக்கு இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications