"தல" தோனி ஓய்வு.. சிஎஸ்கே மேட்ச் டிக்கெட் வேண்டாம்.. பங்குகளை வாங்கு, அதான் பெஸ்ட்! ஆனந்த் சீனிவாசன்
சென்னை: ஐபிஎல் போட்டிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது குறித்துக் கூறிய சில தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் இந்தாண்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் இப்போது பிளேஆப் சுற்றை அடைந்துள்ளது. குஜராத். சென்னை, லக்னோ, மும்பை அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.
இதில் இன்று நடக்கும் முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்று மாலை 7.30 மணிக்கு நடக்கும் இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும் என்பதே சென்னையின் இலக்காக இருக்கும். லக்னோ அணியை இதுவரை சென்னை வீழ்த்தியதே இல்லை என்ற சூழல் நிலவும் நிலையில், அதைச் சென்னை மாற்றி அமைக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், தல தோனி தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நிலையில், அவருக்கும் இந்த கோப்பை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
முதலாம் குவாலிபையர் மட்டுமின்றி எலிமினெட்டர் போட்டியும் சென்னையில் தான் நடக்கிறது. இதனால் 4 அணி வீரர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். சென்னை போட்டியை பார்க்க ரசிகர்கள் பல ஆயிரம் செலவழித்து டிக்கெட் வாங்கி வரும் நிலையில், இது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆனந்த் சீனிவாசனுக்கு தனி அறிமுகம் தேவையில்லை. இணையத்தில் இருக்கும் பெரும்பாலானோருக்கு அவரை பற்றித் தெரியும்.

பொருளாதாரம், முதலீடு என்றால் தெரியாதவர்களும் எப்படி சேமிக்க வேண்டும் என்று டிப்ஸ் வழங்குபவர் இவர்.. அதிலும் குறிப்பாகச் சென்னையில் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் இல்லை என்றால் குடும்பமே நடத்த முடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறி டிரெண்டானவர். இந்த ஆனந்த் சீனிவாசன் கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகப் பெரிய பேன்... இப்போது இருந்து இல்லை சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் ஃபேன் இவர்.
அதற்காக அனைத்து போட்டியையும் பார்ப்பாரா என கேட்காதீர்கள். இது குறித்து ஒரு சமயம் கேள்வி எழுப்பிய போது, "போட்டியைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்.. அதன் முடிவுகள் மாறப் போவது இல்லை.. பிறகு ஏன் முழு போட்டியையும் பார்க்க வேண்டும்" என்று கூறி கேட்டவரையே ஸ்டன் ஆக வைத்தார். இதனிடையே இப்போது சென்னை அணி குவாலிபையர் போட்டியில் விளையாட உள்ளது குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தனது சமீபத்திய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் முதலில் சிஎஸ்கே அணியின் பங்குகள் குறித்து விளக்கியுள்ளார். அதாவது அவர் கூறுகையில், "இந்தியா சிமெண்ட்ஸ் தான் சிஎஸ்கே உரிமையாளர். 4 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணியை தனித்தனி ஷேர்களாக பிரித்தனர். இதன் மூலம் எனக்கும் சிஎஸ்கே ஷேர் இலவசமாகக் கிடைத்தது. இப்படியும் ஒருவருக்கு ஷேர் கிடைத்திருக்கலாம்.
அதேபோல க்ரோ மார்கெட் என ஒன்று இருக்கிறது. அதாவது பங்குச் சந்தையில் போட்டியிடப்படாத நிறுவனத்தின் பங்குகள் பலருக்கும் கிடைத்திருந்தால்.. அந்த பங்குகள் க்ரே மார்கெட்டில் வர்த்தகமாகும். இந்த பங்குகளை ப்ரோக்கர் மூலம் வாங்க முடியும். அதேநேரம் சிஎஸ்கே அணியின் நிதிநிலை எப்படி இருக்கிறது என நமக்குத் தெரியாது. மேலும், சிஎஸ்கே இந்தாண்டு தொடரை வென்றால் மதிப்பு ஏறும் வெளியேறினால் குறையும்.

தோனி வேறு எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற நிலை இருக்கிறது. தோனிக்கு அடுத்து அணியை வழிநடத்த ஆள் இல்லை. அவர் ஓய்வுக்கு பிறகும் அணி நிர்வாகத்தில் இருப்பாரா, தோனிக்கு பிறகு கேப்டன் யார் எனப் பல கேள்விகள் இருக்கிறது. அதைப் பொறுத்தும் அதன் மதிப்பு மாறும். இருப்பினும், நீண்ட கால நோக்கில் இதுவும் லாபத்தையே தரும்.
சிஎஸ்கே மேட்ச் பார்க்க டிக்கெட்டிற்கு காசை செலவிடாமல்.. அதுக்கு பதில் அந்த பணத்தை வைத்து சிஎஸ்கே ஷேரை வாங்குங்கள். 10 ஆண்டுகளில் நல்ல லாபம் வரும்." என்று நறுக்கென முடித்தார். அதே நேரம் தான் முதலீடு குறித்த ஆலோசனை தரும் ஆலோசகர் இல்லை என்றும் முதலீடு செய்யும் முன்பு ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்கும்படியும் அவர் பரிந்துரைத்தார்.












Click it and Unblock the Notifications