லூலூ.. தொக்காக மாட்டிய மேட்டர்! கப்பென பிடித்த அண்ணாமலை.. எடப்பாடியும் விடலையே! என்ன செய்யும் திமுக?
சென்னை: லூலூ மால் விவகாரத்தை தமிழ்நாட்டில் கையில் எடுக்க அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
Recommended Video
கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார்.
துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகள் இந்த பயணத்தின் போது ஈர்க்கப்பட்டது.

லூலூ மால்
இந்த பயணத்தின் ஒரு கட்டமாக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு மால்களை அமைக்கவும் லூலூ நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.

லூலூ க்ரூப் இண்டர்நேஷனல்
லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார். இதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா, பெங்களூரில் மால்களை வைத்து உள்ளனர்.

மால்கள்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரப்போகும் இந்த லூலூ மாலை எதிர்க்க பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இது பற்றி அண்ணாமலை அளித்த பேட்டியில், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகத்தில் லூலூ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. நாங்கள் எந்த நிறுவனத்திற்கும் எதிரான கட்சி கிடையாது. ஆனால் சிறுவணிகர்களை பாதிக்கும் போக்கை அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் லூலூ நிறுவனம் ஒரு செங்கலை வைக்க கூட பாஜக அனுமதிக்காது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் இதை எதிர்த்து உள்ளார். சிறுவணிகர்கள் வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்று முதலில் எதிர்த்தது அதிமுகதான். நாங்கள் வால் மார்டை வர விடவில்லை. அதேபோல் இதையும் வர விட மாட்டோம். லூலூ மால் வந்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். இது மக்களுக்கு எதிராக திரும்பும். அதனால் இதை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 8 வழி சாலை விவகாரம் போல அதிமுக, பாஜக நினைக்கிறதாம்.

திமுக தரப்பு
இது பற்றி திமுக தரப்பு நிர்வாகிகளிடம் விசாரித்ததில்.. மற்ற மால்கள் போலத்தான் இதுவும். அதிமுக ஆட்சியில் பல மால்கள் கட்டப்பட்டதே அதை எதிர்க்கவில்லையே. பாஜக ஆளும் கர்நாடகாவில் பெங்களூரில் லூலூ மால் இருக்கிறதே. அதை அண்ணாமலை எதிர்க்கவில்லையே. மால்கள் வந்தாலும் சிறு வணிகம் எப்போதும் இருக்கும். சென்னையில் பல மால்கள் இருக்கிறது. சாலையோர கடைகள் என்ன காணாமல் போய்விட்டதா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications