சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விட்டுக்கொடுக்கல பார்த்தீங்களா.. கிளியர் மெசேஜ் அனுப்பிய எடப்பாடி.. இனிதான் ஆட்டமே.. கலகலத்த தலைகள்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முக்கியமான முடிவு ஒன்று அதிமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் விரைவில் நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ள நிலையில், தற்போது தேர்தலில் தேர்வான புதிய நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதிமுகவில் மொத்தம் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உள்ளன. இதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 21ம் தேதி நடந்தது.

நான் பாவம் விட்ருங்க! முந்திரி காட்டிற்குள் கதறிய பெண்! மாறிமாறி சிதைத்த 4 பேர்! திடுக்கிட்ட தஞ்சை.! நான் பாவம் விட்ருங்க! முந்திரி காட்டிற்குள் கதறிய பெண்! மாறிமாறி சிதைத்த 4 பேர்! திடுக்கிட்ட தஞ்சை.!

ஏப்ரல் 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை தொடந்து புதிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், வட்ட அளவிலான நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

சேலம்

சேலம்

முதல் கட்டமாக தற்போது 41 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் எடப்பாடி பழனிசாமி இருந்த நிலையில்தான், அந்த பதவியை இளங்கோவனுக்கு கொடுத்து இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் போட்டியிட விரும்பி இருந்தும் கூட இளங்கோவை டிக் அடித்துள்ளனர். அதிமுகவினர் இடையே இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளங்கோவன் நியமனம்

இளங்கோவன் நியமனம்

ஏனென்றால் இளங்கோவன் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை கேஸ் உள்ளது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவராக இருக்கும் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடு தொடர்பாக இவரின் வீட்டின் ஆதாரங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அப்போதே தெரிவித்தது. இன்னொரு பக்கம் கோடநாடு வழக்கிலும் இவர் விசாரணை வளையத்தில் இருப்பதாக லஞ்ச ஓழிப்புத்துறை கூறியுள்ளது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இந்த நிலையில்தான் இளங்கோவன் நியமனம் அதிமுக நிர்வாகிகள் இடையே கவனத்தை ஈர்த்து உள்ளது. இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில், எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. கேஸில் மாட்டினால் தலைமை நம்முடன் நிற்காது. கேஸில் மாட்டியவர்களுக்கு தலைமை பெரிதாக வாய்ப்பு கொடுக்காது என்றுதான் நினைத்தோம். ஆனால் எடப்பாடி விட்டுக்கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கு இது நம்பிக்கை தரும் என்கிறார்கள்.

பரவாயில்லை - சந்தோசம்

பரவாயில்லை - சந்தோசம்

அதாவது கேஸ் வந்தால் கட்சி உங்களை விட்டுக்கொடுக்காது என்ற கிளியர் மெசேஜ் அனுப்பும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவனுக்கு இந்த முக்கிய பதவியை தூக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. கட்சி உங்களுடன் நிற்கும்.. கவலைப்பட வேண்டாம்.. கேஸ் வந்தால் தூக்கிவிட மாட்டோம் என்று நம்பிக்கை கொடுக்கும் விதமாக இந்த மூவை இபிஎஸ் செய்து இருக்கிறாராம். இதனால் அதிமுகவில் மற்ற நிர்வாகிகள் மத்தியில் இந்த முடிவு ஒரு விதமான பாசிட்டிவ் பதிலை பெற்று உள்ளது.

இனிதான் ஆட்டமே

இனிதான் ஆட்டமே

அதோடு விரைவில் அதிமுக கூட்டம் நடக்க உள்ளது. இதில் எடப்பாடி எப்படியும் ஒற்றை தலைமையை நோக்கி செல்வார் என்றும் கூறப்படுகிறது. ஒற்றை தலைமையை பிடிக்கும் வகையிலேயே இந்த தேர்தலில் பெரும்பாலும் தன்னுடைய ஆதரவாளர்களை எடப்பாடி இறக்கி உள்ளார் என்கிறார்கள். எல்லா நிர்வாகிகளும் தேர்வான பின் எடப்பாடி அந்த மூவையும் எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறதாம். அதனால்தான் தனக்கு நெருக்கமானவர்களை எடப்பாடி விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அதே சமயம் சேலத்தை சேர்ந்த சில டாப் நிர்வாகிகள் இதை விரும்பவில்லை என்கிறார்கள். சேலத்தில் கட்சி பணி பார்த்த பலர் இருக்கிறார்கள். சேலத்தில் பல நிர்வாகிகள் இருக்கும் நிலையில், இவருக்கு பதிவு கொடுத்தது தவறு. இதற்கு எடப்பாடியே வந்து இருக்கலாம். அவர் வந்திருந்தால் மாவட்ட அளவிலாவது கட்சி நன்றாக இருந்திருக்கும் என்று கட்சி கொங்கு நிர்வாகிகள் சிலர் புலம்பி வருகிறார்களாம்.

English summary
Why appointment of Elangovan as secretary by Edapapdi Palanisamy sparks discussion? அதிமுகவில் விரைவில் நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ள நிலையில், தற்போது தேர்தலில் தேர்வான புதிய நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X