சார்ஜ் எடுத்த வானதி.. அமித் ஷா அப்படி சொன்னதும்.. எல்லாம் ஓவர்.. பாஜகவை அதிர வைக்கும் "அமைதி"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் தொடங்கி அடிமட்ட நிர்வாகிகள் வரை பலரும் குழப்பத்தில் உள்ளனர். கட்சியில் நடக்கும் முக்கியமான ஒரு விஷயத்தை பார்த்து எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன்.

lok sabha election 2024 tamilisai soundrarajan amit shah 2024

தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.

ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?.

இன்னொன்று நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம், என்றெல்லாம் கூறினார்.

அமித் ஷா கண்டிப்பு: இன்னொரு பக்கம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக தற்போது திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசையை அழைத்து கண்டிப்பது போல கையால் சைகையை காட்டுகிறார். இதற்கு தமிழிசை பதில் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழிசையை கண்டிக்கும் விதமாக அமித் ஷா மறுத்து பேசுகிறார். இந்த வீடியோ டிரெண்டானது.

அண்ணாமலை அமைதி; இன்னொரு பக்கம் அண்ணாமலை, பாஜகவில் இனி பேட்டிகளை ஒழுங்கு செய்ய போகிறோம். இனி பேட்டிகளை பாஜக அலுவலகத்தில் மட்டுமே கொடுப்போம். பாஜக அலுவலகத்தில் மட்டுமே பேசுவோம். ஏர்போர்ட்டில் எல்லாம் பேச மாட்டேன் என்று அண்ணாமலை கூறினார். தனக்கு மட்டுமின்றி பாஜகவில் எல்லா பேட்டியையும் ஸ்ட்ரீம் லைன் செய்ய போவதாக கூறினார்

எல்லோரும் அமைதி: இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை - தமிழிசை அதன்பின் நேரில் சந்தித்து சமூகம் ஆனார்கள். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அண்ணாமலை அப்படியே அமைதியாகிவிட்டார். தமிழிசையும் அமைதியாகிவிட்டார்.

இவர்கள் இருவரும் இப்போதெல்லாம் பேட்டி கொடுப்பது இல்லை. பெரிதாக ஊடகங்கள் முன் வருவது இல்லை. ஏதாவது கருத்துக்களையும் சொல்வது இல்லை. லைம்லைட்டிலேயே இருக்கும் இவர்கள் பேட்டிகளை தவிர்த்து வருகின்றனர். பாஜகவில் நிலவும் இந்த தீவிர அமைதி நிர்வாகிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வானதி மட்டுமே கருத்து: ஆனால் இன்னொரு பக்கம் பேட்டிகளை கொடுக்கும் பொறுப்பிற்கு வானதி மட்டும் சார்ஜ் எடுத்துள்ளார். நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுகவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். அதில், நாங்க தைரியமா இறங்க தான் போறோம். நாங்க தேர்தலில் தைரியமாக போட்டியிடுவோம். இதை பற்றி விளக்கமாக சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அராஜகமாக நடக்கும். பண பலம் வெல்லும். ஆனால் இதையும் மீறி நாங்கள் போட்டியிடுகிறோம். இதை எல்லாம் மீறி தேர்தலில் போட்டியிடுவதால் அதிமுக உறுதியாக உள்ளது. முழுமையாக செய்திகளை படித்து அதன்பின் பேசுகிறேன். 2026ல் யார் எவ்வளவு வாக்குகள் வாங்குவார்கள் என்று மக்கள் சொல்வார்கள், என்று வானதி சீனிவாசன் கூறினார்.

வானதி மட்டும் பேட்டி கொடுக்க மற்ற பாஜக தலைவர்கள் அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+