சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. வரிசையில் நிற்கும் மக்கள்! காரணம் HMPV? உண்மை என்ன?
பெய்ஜிங்: சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிய தொடங்கி உள்ளன. அங்கே மக்கள் பலரும் மருத்துவமனையில் வரிசையில் நின்று வருகின்றனர்.
இன்னும் பல இடங்களில் மருத்துவமனைகளில் மக்கள் ஐவி ட்ரிப்ஸ் போட்டபடி படுத்துக்கிடக்கின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பல புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

HMPV வைரஸ் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு பின் HMPV வைரஸ் காரணம் கிடையாது. சீனாவில் உள்ள மக்களின் நிலையே இதற்கு காரணம். அங்கே சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு கூட.. ஐவி ட்ரிப்ஸ் போடும் வழக்கம் உள்ளது.
அதாவது சிறிய காய்ச்சல் வந்தால் கூட அதற்கு ட்ரிப்ஸ் போடும் வழக்கம் சீன மக்களிடம் உள்ளது. இந்த நிலையில்தான் அங்கே தற்போது நிறைய பருவ கால காய்ச்சல்கள் ஏற்பட்டு உள்ளன. பருவகால ரீதியாக பலரும் சிறிய சிறிய நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
பலருக்கும் மலேரியா உட்பட பல பருவ கால காய்ச்சல்கள் ஏற்பட்டு உள்ளன. இதன் காரணமாகவே பல இடங்களில் மருத்துவமனைகளில் மக்கள் ஐவி ட்ரிப்ஸ் போட்டபடி படுத்துக்கிடக்கின்றனர். மற்றபடி இதற்கு பின் HMPV வைரஸ் காரணம் இல்லை. HMPV வைரஸ் பாதிப்பு அந்த அளவிற்கு ஏற்படவில்லை என்று சீன அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் வேகமாக பரவுகிறது:
கொரோனா பரவி கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் HMPV வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர வைரஸ் மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
HMPV வைரஸ் என்பது human metapneumovirus ஆகும். HMPV வைரஸ் அங்கே ஏற்கனவே பரவி வரும் influenza A, Mycoplasma pneumoniae மற்றும் லேசான Covid-19 வைரசுக்கு இடையே இந்த HMPV வைரஸ் பரவி வருகிறது. எங்கள் நாட்டிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானது.. இதனால் பாதிப்பு இல்லை என்று சீனா கூறி வருகிறது. ஆனால் கொரோனாவிற்கும் இப்படிதான் சீனா கூறியது.
சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது.. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று அழைக்கும் வகையில்.. வயது குறைவானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் குணமடைவார்கள், இருப்பினும் கடுமையான நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
HMPV காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்றாலும் கூட இது ஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்று அச்சுறுத்தல் அல்ல. பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான். இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
HMPV இருமல் அல்லது தும்மல், தொடுதல் அல்லது கைகுலுக்குதல் போன்ற நெருங்கிய தொடர்பு மூலம் பரவும். அசுத்தமான இடங்களில் இந்த வைரஸ் இருக்கலாம், வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவும், நீர்த்துளிகள் மூலம் பார்வையும். இதனால் மாஸ்க் போடுவது பலன் அளிக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications