கட்சி ஆரம்பித்தும்.. விடாத ரசிக சண்டை.. அஜித் படத்தின் வியூவிற்காக அடித்துக்கொள்ளும் தவெக "ஃபேன்ஸ்"
சென்னை: நடிகர் விஜய் .. அரசியல்வாதி ஆக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். அவர் தவெக கட்சியை தொடங்கிய நிலையிலும் கூட.. அவரின் ரசிகர்கள் இன்னும் ரசிக மனோபாவத்தில் இருந்து வெளியே வராமல்.. சினிமா சண்டை
போட்டுகொண்டு உள்ளனர்.
கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழக முதலாமாண்டு நிகழ்வில் பேசிய விஜய், மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால், சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர் குழப்பத்தில் உள்ளனர். பணம் பணம் பணம் என பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நம்முடைய முதல் வேலை. அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது பின்னால் இருந்தவர்கள் இளைஞர்கள்தான்.

மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் பணம் மட்டுமே குறியாக உள்ள பண்ணையார்களை அகற்ற வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தது ஒரு சிலருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. விரைவில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த போகிறோம்.
அந்த காலத்துல பண்ணையார்கள் தான் பதவியில இருப்பாங்க. இப்ப பதவி இருக்கவங்க எல்லாம் பண்ணையாரா மாறிடுறாங்க. இப்போ புதுசா ஒரு பிரச்னையை கிளப்பி இருக்காங்க.புதிய கல்விக்கொள்கையை கொடுக்கவில்லை என்றால் மாநில நிதியை நிறுத்துவோம் என்கிறார்கள். கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை., என்றேல்லாம் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா பேச்சு
இதே விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் இப்போது தமிழக வெற்றிக்
கழகம்தான் எதிர்க்கட்சி. அடுத்த 70 வாரங்களுக்கு விஜய்தான் எதிர்கட்சித் தலைவர் என்றெல்லாம் பேசினார். ஆனால் விஜய் ஆக்கபூர்வமாக எதிர்கட்சித் தலைவராக என்ன செய்ய தொடங்கி உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் என்று சொல்லும் தமிழக வெற்றிக் கழகம், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால்.. காரணமா இல்லை? தினம் தினம் பல கொள்கைகள், கொலைகள், பெண்கள் பாதுகாப்பு பிரச்சனை, பலாத்காரம் என்று ஆயிரம் விஷயங்கள் நடக்கின்றன. இதை எல்லாம் பேசி இருக்கலாம் விஜய்.. திமுகவை கொள்கை எதிரி இல்லை அரசியல் எதிரி என்கிறார். ஆனால் திமுகவை அரசியல் ரீதியாக எதிர்க்காமல் கொள்கை ரீதியாக எதிர்க்கிறார்.
சட்ட ஒழுங்கு பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. சரி அதை விடுங்கள்.. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தமிழக அரசு கடனில் உச்சத்தில் இருக்கிறது.. அதை பேசவில்லை.
ரசிக சண்டை
ஹேஷ்டேக் சண்டையால் பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் அதே விஜய் தனது ரசிகர்கள் செய்யும் ஹேஷ்டேக் சண்டையை "சம்பவம்" என்கிறார். இப்போது அதே ரசிகர்கள் அஜித்திற்கு எதிராக ரசிக ஹேஷ்டாக் சண்டை போட்டுக்கொண்டு உள்ளனர்.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது மாஸ்டர் படம் போன்ற விஜயின் டீசர் ரெக்கார்ட்களை முறியடித்து உள்ளது. ஒரே நாளில் பல மில்லியன்ஸ் வியூஸ்களை பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. அதாவது விஜய் ரசிகர்கள்.. அந்த டீசரை கிண்டல் செய்கின்றனர்.
மாஸ்டர் இப்போ வந்தால் அதைவிட பெரிய ஹிட் அடிக்கும். விஜயின் கடைசி படத்திற்கு பாருங்கள்.. எவ்வளவு வியூஸ் வருகிறது என்று.. அப்போ புரியும் என்று கூறி வருகின்றனர். அஜித்தே சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. பட்டங்களை துறந்தவர்.. கடவுளே அஜித்தே போன்ற வசனங்களையும் விரும்புவது இல்லை.
அப்படி இருக்க அவர் விஜயை போட்டியாகவும் பார்ப்பது இல்லை. ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றும் கூட.. அஜித்தை போட்டியாக கருதி விஜய் ரசிகர்கள் போஸ்ட் செய்கின்றனர். தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது விஜய் தனது ரசிகர்களை, தொண்டர்களை அதை பற்றி பேச வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும்.
ஆனால் விஜயும் அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. பாசிசமும், பாயாசமும் செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் விஜய்.. தனது ரசிகர்களின் விளையாட்டுகளை கேள்வி கேட்காமல் இருப்பதை பார்த்தால் ஒரு விஷயம்தான் கேட்க தோன்றுகிறது.. ப்ரோ வாட் ப்ரோ?












Click it and Unblock the Notifications