விஜய்யை போய் ஏன் சமாதானம் செய்யுறீங்க? ஃப்யூஸ் நம்ம கைல இருக்கு! ராகுலிடம் பாய்ந்த டிகே சிவக்குமார்
சென்னை: விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்று தவெக அமைச்சர்கள் கட்டமைத்த பிம்பத்தை உடைக்கும் வகையில், ராகுலை ஏற்காவிட்டால் அமைச்சரவை யிலிருந்து காங்கிரஸ் விலகும் என அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி காங்கிரஸ் தலைவர்கள் அவரவர்கள் பாணியில் எதிர்ப்புத் தெரிவித்திருந் தனர்.
இதனை கவனித்த விஜய், காங்கிரசின் எச்சரிக்கை பயப்படுகிறவர் கள் நாம் அல்ல ; விருப்பமிருந்தால் விலகி கொள்ளச் சொல்லுங்கள் என தனது தனிச்செயலாளர் ஜெகதீஸ் பழனிச்சாமி மூலம் காங்கிரஸ் மேலிட த்துக்கு தகவல் பாஸ் பண்ணியிருந்தார். தகவலை அறிந்து, சில இன்ஸ்ட்ரக்ஷன்களை மாணிகம் தாக்கூரிடமும், ப்ரவீன் சக்கரவர்த்தியிடமும் அறிவுறித் தியது காங்கிரஸ் மேலிடம். இதனை அடுத்து இவர்கள் இருவரும் விஜய்யை சந்தித்து சமாதானப்படுத்தினர்.

கர்நாடக முதல்வர் சிவக்குமார் - ராகுல்காந்தி பேச்சு
இதன் பிறகு நடந்ததுதான் ஏக ட்விஸ்ட் என்கிறார்கள் காங்கிரஸ் எம்.பி. க்கள். நம்மிடம் பேசிய அவர்கள், விஜய்யை சமாதானப்படுத்தியதாக வந்த தகவல்களை அறிந்த கர்நாடக முதல்வர் சிவக்குமார், ராகுல்காந்தியை தொடர்பு கொண்டு, அவரிடம் (விஜய்) சமாதானம் பேசியிருப்பது நமக்கு ஆரோக்கியமானதில்லை. இந்த விவகாரத்தை நான் ஹேண்டில் பண்ணு கிறேன் என சொல்லி விட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
உடனே, உங்களுக்கு நெருக்கமான இரண்டு பேரை பெங்களூருக்கு அனுப்பி வையுங்கள். நான் அவர்களிடம் பேச வேண்டும் என விஜய்க்கு தகவல் அனுப்பியிருக்கிறார் சிவக்குமார். இதனை தொடர்ந்து தனக்கு நம்பிக்கைக்குரிய இரண்டு முக்கியஸ்தர்களை கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்தார் விஜய். அவர்கள் சிவக்குமாரை சந்தித்துள்ளனர்.
காங்கிரசின் தயவில் தான் உங்கள் அரசு அமைந்திருக்கிறது
அப்போது, பரஸ்பரம் நலம் விசாரிப்புகளை முடித்து விட்டு, அவர்களிடம் பேசிய சிவக்குமார், தமிழகத்தில் நடப்பது கூட்டணி அரசு தான். காங்கிரசின் தயவில் தான் உங்கள் அரசு அமைந்திருக்கிறது. வெறும் ரெண்டு அமைச்சர் பதவி தந்து விட்டால் காங்கிரஸ் மீது எப்படி வேண்டுமானாலும் ஆதிக்கம் செலுத்தலாம், புறக்கணிக்கலாம்னு நீங்க நினைக்கக் கூடாது. பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான். அவரை பிரதமராக எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்கிற உத்தரவாதத்தை விஜய் கொடுத்ததால் தானே உங்கள் ஆட்சி அமைய காங்கிரஸ் ஆதரவு தந்தது? அப்புறம் அந்த உத்தரவாதத்தில் இருந்து மாறி, விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என நீங்கள் உருவாக்குவது ராகுலை சிறுமைப்படுத்துவது போலிருக்கிறது.
ராகுலை சிறுமைப்படுத்தி வேண்டாம்
ராகுலை சிறுமைப்படுத்து வதை நாங்கள் விரும்பவில்லை. நான் நினைச்சேன்னா, ஒரே நாளில் உங்க விஜய்யை பதவியிலிருந்து இறக்கி காட்டிவிட முடியும். ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றால், கம்யூனிஸ்டுகளும் வாபஸ் பெறுவார்கள். அவர்களை வாபஸ் பெற வைக்கும் தெம்பு எங்களுக்கு இருக்கு. வாபஸ் வாங்கிக்கொள்ள லாமா? என மிக கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார் சிவக்குமார் என்கிறார்கள் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.
இதனை விஜய்யின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதில் அப்-செட்டான விஜய், ஏற்கனவே இடது சாரிகள் பல்வேறு பிரச்சனைகளில் முரண்பட்டு இருந்து வருவதையும் உணர்ந்து, ஆதரவு கட்சிகளை கூல் படுத்தவும், கூட்டணியை வலிமைப் படுத்தவும் தான் ஆதரவு கட்சிகளின் தலைவர்களுடனான 2-வது கூட்டத்தை 9-ந்தேதி கூட்டியுள்ளார் விஜய்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
