நேரம் பார்த்தா இப்படி நடக்கணும்.. ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு மேலிடம் எதிர்ப்பா? என்ன நடக்கிறது?
சென்னை: இந்திய அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ள நிலையில், ரோஹித் சர்மாவிற்கு இந்திய கேப்டன் பதவி வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவின் சமீபத்திய டி 20 கேப்டன்சி பார்ம் காரணமாக அவருக்கு இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்பு அளிக்கப்படாது என்கிறார்கள்.
இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி ராஜினாமா செய்துள்ளார். உலகக் கோப்பை டி 20 தொடர்தான் கோலி இந்திய டி 20 கேப்டனாக ஆடும் கடைசி தொடர் ஆகும். அதன்பின் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுவார்.
அதன்பின் இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும். புதிய கேப்டனாக பிசிசிஐ யாரை நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளைஞர்
பெரும்பாலும் இளம் வீரர் ஒருவர் டி 20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் ஆகியோர் கேப்டன் ஆகும் தகுதி கொண்ட வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள். பும்ராவும் இந்த கேப்டன்சி லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. டி 20 கேப்டன்சி என்பது இளைஞர்களுக்கானது. இதனால் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பு கொடுக்கப்படாது.

ரோஹித்
கோலி டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் என்றதும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ரோஹித் சர்மா மிக சிறந்த ஐபிஎல் கேப்டன் ஆவார். 5 முறை கோப்பைகளை ஐபிஎல் போட்டிகளில் இவர் வென்று இருக்கிறார். இதனால் ரோஹித் சர்மாதான் சிறந்த டி 20 இந்திய கேப்டனாக இருப்பார் என்று இணையத்தில் பலர் கருத்துக்களை வைத்து வந்தனர்.

ஆனால் என்ன?
ஆனால் ரோஹித் சர்மா கோலியை விட வயது கூடியவர். நல்ல பேட்டிங் பார்மில் இருந்தாலும் நீண்ட காலம் இவர் கேப்டனாக இருக்க முடியாது. இந்தியா பெரும்பாலும் நீண்ட கால கேப்டனுக்கே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ரோஹித்தின் சமீபத்திய கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. அவரின் கேப்டன்சிக்கு கீழே இந்த முறை மும்பை அணியின் வியூகங்கள் கணிக்க கூடியதாகவே இருந்தது.

மும்பை அணி
அதோடு மும்பை அணியும் இந்த சீசனில் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. முக்கியமாக மும்பை அணியில் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பியதும் என்ன செய்வது என்று தெரியாமல் ரோஹித் குழம்பிப் போய் உள்ளார். சூர்யா குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் சரியாக ஆடவில்லை என்றதும் ரோஹித் சர்மாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முறையான பிளான் பி அவரிடம் இருப்பது போல தெரியவில்லை. இந்த சீசனில் ரோஹித்தும் கேப்டன்சி கொஞ்சம் சொதப்பலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொல்லார்ட்
பொல்லார்ட், போல்ட் போன்ற வெளிநாட்டு வீரர்களை அதிகம் நம்பி இருக்கும் ரோஹித், அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினால் அதில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல் இந்த சீசனில் கஷ்டப்படுகிறார். கடந்த சீசனில் இப்படி இல்லை. இதனால் ரோஹித்திற்கு டி 20 இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது. அவரின் திட்டங்கள் கணிக்கும்படி ஆகிவிட்டன.

ஆர்வம் இல்லை
இதனால் பிசிசிஐ இவருக்கு பதவியை கொடுப்பதில் ஆர்வமாக இல்லை என்கிறார்கள். சரியாக நேரம் பார்த்து அவரின் கேப்டன்சி இப்போது சொதப்பி உள்ளது. இதனால் பெரும்பாலும் பிசிசிஐ ஷ்ரேயேஸ் ஐயர் போன்ற வீரர்களை கேப்டனாக்க முயற்சிக்கும் என்கிறார்கள். பெரும்பாலும் டி 20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய டி 20 அணியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்களின் ஆதிக்கமும், இளம் வீரர்களின் ஆதிக்கமும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications