குதித்து குதித்து ஆடி.. குலுங்கி குலுங்கி சிரித்து.. மனசெல்லாம் நின்ற சனம்.. ஏன் அனுப்பினார் கமல்?

சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன வயசுதான்.. இதற்குள் இந்த அளவுக்கு பக்குவமா? முதிர்ச்சியா? என்ன இருந்தாலும் சனம் ஷெட்டியை வெளியே அனுப்பியிருக்க கூடாது என்ற முணுமுணுப்புகள் 2 நாட்களாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து வருகின்றன.

இந்த முறை சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.. அவர் வெளியேறியதற்கு முந்தின நாள் முதல் இன்றுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீளவில்லை. இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன.. சிறப்பாக விளையாடியதாக பலமுறை கமலால் பாராட்டப்பட்ட சனம், அதே கமலால் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்!

 ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன்

இதைதான் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்புகிறார்.. 'சனம் வாக்களிப்பால் வெளியேறினாரா? திட்டமிட்டு அனுப்பப்பட்டாரா? இது எல்லார் மனதிலும் எழுந்திருக்கிறக் கேள்வி. பலருக்கு சந்தேகமே இல்லை.. இது சதிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்" என்று ஒரு பெரிய பதிவு பதிவிட்டுள்ளார்.

சனம்

சனம்

ஆரம்பத்தில் சனம் ஆட்டிடியூட் காட்டுகிறார் என்றே பரவலாக சொல்லப்பட்டது.. மேலும் காமிரா அட்டென்ஷன் அதிகமாக இருப்பதாகவும், எதை பேசினாலும், எதை செய்தாலும் கேமிராவை முன்னிறுத்தியே செய்வதாகவும் சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஒரு சின்ன விஷயத்தையும் பெரிதாக நீட்டி முழக்கி விளக்கும் பாங்கும் யாராலும் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை.. இதெல்லாம் பொதுவாக சனம் மீது வைக்கப்பட்டகுற்றச்சாட்டுகள்.

துணிவு

துணிவு

நிலையான போக்கையே கடைப்பிடித்தார்.. யார் என்ன சொன்னாலும் சரி, தன் கருத்தை துணிவுடன் ஏற்றார்.. எதையும் நிதானமாக எதிர்கொண்டார்.. உச்சத்துக்கு டென்ஷன் எகிறினாலும், கெட்ட வார்த்தையோ, தடித்த வார்த்தையோ பயன்படுத்தியதில்லை... அவ்வளவு ஏன், வயதில் அத்துனை குறைவான பாலாஜியையே வாங்க, போங்க என்றுதான் மரியாதையுடன் கூப்பிட்டு பேசினார். இது பெரும்பாலானோருக்கு இல்லாத தனி சிறப்பாகும்.

 ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

தனி கேங் ஒன்று வீட்டுக்குள் ஒன்றுகூடி மிரட்டலாக சுற்றி கொண்டு வந்தாலும் அசராமல் தனி நபராக சுற்றி வந்தவர்.. இப்படிப்பட்ட சனத்தை வெளியே அனுப்பியது அநியாயம், சனம் இல்லையென்றால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம் என்று கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.. இதைதவிர, #NoSanamNoBiggBoss என்கிற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இது கிட்டத்தட்ட ஓவியாவுக்கு கிடைத்த அங்கீகாரம் போலவே உள்ளது.. இதே பிக்பாஸ் சீசனில் மற்ற போட்டியாளர்களைவிடவும் சனம்தான் இந்த அளவுக்கு ஃபேமஸ் ஆகி உள்ளார்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

கிளம்பி செல்லும்போது, 'ஆல் தி பெஸ்ட்' என்று பிக் பாஸ் சொல்லி அனுப்பினார்.. இப்படி பிக் பாஸ் வரலாற்றிலேயே போட்டியாளர் ஒருவர் வெளியே செல்லும்போது பிக்பாஸ் சொல்வது இதுதான் முதல்முறை! கடைசி நாளில், சனம் ஷெட்டிக்கு கால் டாஸ்க்கை ஏன் கமல் கொடுத்தார்? ஸ்டிராங் கண்டென்ட்டன்ட் என்று தெரிந்தும் அவரை வெளியேற்றுவது நியாயமற்றது என்று தெரியாதா? இருந்தும் கால் டாஸ்க்கை சனம் செய்யாததால், அதையும் விளையாட வைத்து, அந்த கணக்கையும் தீர்த்து அனுப்பி உள்ளாரா கமல் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

அனிதா

அனிதா

எத்தனை பேர் சனம், அனிதா, ஷிவானியை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்டபோதுகூட, வீட்டிலேயே அதிகப்படியான வாக்குகளை பெற்றது சனம்தான்.. அந்த வீட்டில் விளையாடாமல் சும்மாவே சுற்றி கொண்டிருக்கும் ஷிவானியைவிட பக்குவமும், நிதானமும் நிறைந்த சனம் எந்த வகையில் குறைந்து போய்விட்டார் என்பதே பிரதான கேள்வியாக உள்ளது.. ஆனால், வெளியேறும்போதுகூட, 'என்னுடைய டைட்டிலை உனக்கு விட்டுக்கொடுக்கிறேன் போ' என்று சனம் சொன்னிய வார்த்தையில்தான் எவ்வளவு தெளிவு? எத்தனை தன்னம்பிக்கை? இது ஒன்றேபோதும்.. சனம் டைட்டிலை வெற்றி பெற்றது போலதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+