'திராணி இருக்குன்னா'.. சவால் விட்ட அண்ணாமலை.. கோர்ட்டுக்கு அலையபோகிறார்.. பதிலடி கொடுத்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியில் இருந்து அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024ல் வெளியிடப்படும் என்று பேசிய அண்ணாமலை, எதிர்க்கக்கூடாதுன்னா.. டெல்லி போய் அண்ணாமலையை மாத்திட்டுவாங்க, சக்தி இருக்கு , திராணி இருக்கு, தெம்பு இருக்கன்னா மாத்திட்டுவாங்க என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரஸ்மீட்டில் சவால் விட்டிருக்கிறார்.

இதன் மூலம் திமுக கடுமையாக எதிர்த்து வரும் அண்ணாமலை, வரும் 2024ம் தேர்தலில் அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அண்ணாமலை, தன்னை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து இப்போதைக்கு மேலிடம் மாற்ற விரும்பாது என்று உறுதியாக நம்புவதால் இப்படி பேசியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

why bjp leader annamalai challenge against aiadmk and dmk over corruption list?

பாஜக பல வருடங்களாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற போராடி வருகிறது. இதற்கு அதிமுகவும், திமுகவும் தடையாக உள்ள. இரு கட்சிகளுமே பாஜகவை உள்ளே வரக்கூடாது என்பதில் கடந்த காலங்களில் உறுதியாக இருந்தன. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னரே பாஜக, பல பிரபலங்களை இணைத்து கட்சியை பலமாக்க முயன்று வரும் பாஜக தலைமை சுமார் 20 வருடத்திற்கு பிறகு கடந்த 2021 தேர்தலில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

எனினும் பாஜக வென்றது அதிமுக தயவில் தான் என்று திமுக விமர்சித்து வருகிறது.ஏன் அதிமுகுவே கூட எங்கள் தயவில் தான் பாஜகவினர் வென்றார்கள் என்று நேரடியாக கிண்டல் செய்து வருகிறது. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான பட்டியல் என்று அண்ணாமலை இன்று வெளியிட்ட போது, திமுகவைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி, அதிமுகவில் உள்ளவர்களின் ஊழலையும் வெளியிட வேண்டும் என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் அவர் திமுக பட்டியலை மட்டுமே வெளியிட்டார்.

அதேநேரம் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், இன்று பேசிய அண்ணாமலை, ஆட்சியில் இருந்து அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024ல் வெளியிடப்படும் என்றும், எதிர்க்கக்கூடாதுன்னா.. டெல்லி போய் அண்ணாமலையை மாத்திட்டுவாங்க, சக்தி இருக்கு , திராணி இருக்கு, தெம்பு இருக்கன்னா மாத்திட்டுவாங்க என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரஸ்மீட்டில் சவால் விட்டிருக்கிறார்.

அண்ணாமலை மேலும் கூறுகையில், இங்கு எப்படி வெற்றி பெறலாம் என்று அரசியல் நடக்கிறதே ஒழிய, தமிழனை மையமாக வைத்து நடைபெறவில்லை. இவர்கள் செய்யக்கூடிய அரசியல், பாழ்பட்ட அரசியல், தமிழர்களுக்கு நல்லது செய்யும் அரசியல் இல்லை. இங்கு இருப்பது பணத்தை வாங்கி கொண்டு,பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்படி வெற்றி பெறலாம் என்று அரசியல் நடக்கிறதே தவிர, தமிழனை மையமாக வைத்து அவனை எப்படி உயர்த்துவது என்று அரசியல் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அண்ணாமலை முன்னதாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் பாஜகவில் இருந்து விலகிவிடுவேன் என்று பேசியதாக செய்திகள் பரவின. அப்போது பதிலடி கொடுத்த அதிமுக, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தது. டெல்லி மேலிடம் தான் கூட்டணியை முடிவு செய்யும் என்றும் மாநில தலைவர் அல்ல என்று எடப்பாடி பழனிசாமியே பதிலடி கொடுத்தார். அதன்பின்னர் அண்ணாமலை , டெல்லி மேலிடம் தான் தமிழ்நாட்டில் கூட்டணியை முடிவு செய்யும் என்று பேசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலுக்கு இந்த சவாலுக்கு திமுக கடும் பதிலடி கொடுத்துள்ளது. அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார். அண்ணாமலை தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார் என்றும், அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது என்றும் கூறினார். திமுக விரைவில் அண்ணாமலை மீது வழக்கு தொடரும் என்பது ஆர்எஸ் பாரதியின் பேச்சின் மூலம் தெரியவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+