சென்னைவாசிகளுக்கு இனிப்பான செய்தி.. உங்க கிட்ட கார், பைக் இருக்கா? இனி சல்லு சல்லுனு போகலாம்!
சென்னை: சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்கள் மற்றும் சாலை திட்டங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் வரும் நாட்களில் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த திட்டங்கள் முடிந்து நடைமுறைக்கு வந்ததும் வாகன ஓட்டிகளின் பயணம் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் முக்கிய சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் பல்வேறு மாற்றங்களை பெற உள்ளன. சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.

இந்த நிலையில் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி சாலை: சமீபத்தில்தான் ஜிஎஸ்டி சாலையில் சந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ. 82 கோடி செலவில் அரசு மேம்பாலம் கட்டியது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டது, 1.5 கிமீ நீளம் கொண்டது என்றாலும் கூட, இது ஒரு வழி சாலையாக உள்ளது. அதாவது தாம்பரம் டூ கிண்டி செல்லும் ஒரு வழி சாலையாக உள்ளது.
இதனால் கீழே பல்லாவரம் - குரோம்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் எதிர் திசையில் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இங்கே இருக்கும் பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்று வந்தது. அந்த பணிகள் முடிந்த நிலையில் வரும் நாட்களில் சாலை விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக 15.7 கோடி மதிப்பிலான சொத்துகள் இடிக்கப்பட உள்ளன.
புதிய பாலம்: சென்னையில் அண்ணா சாலையில் இன்னொரு பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது. முக்கியமாக சைதாப்பேட்டையை தாண்டி இருக்கும் பகுதிகளில் பாலம் அமைக்க வேண்டும். சைதாப்பேட்டை - ஜெமினி பாலம் இடையே வேறு பாலமே இல்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
அந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் விதமாக சென்னையில் அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பகுதியில் முக்கியமாக நந்தனம் சிக்னல் உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இங்கே நீண்ட பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த பாலத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பயன்கள் உள்ளன. அவை என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம். சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால் இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இல்லை. நந்தனம் சிக்னல் தொல்லை இனி இல்லை.
சென்னையில் எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூர் பாலம், கொல்கத்தா மா பாலம் போன்ற பாலங்கள் இல்லை என்ற குறையை இந்த நீண்ட பாலம் போக்கும். இந்த பாலத்தின் இரண்டு பக்கமும் ஹை ரைஸ் கட்டிடங்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. அடியே சாலை போக்குவரத்து இன்னும் எளிதாகும். மழை காலங்களில் மக்கள் பயணம் செய்ய வசதியாக இருக்கும். கத்திப்பாரா - இந்த புது பாலம் - ஜெமினி இடையிலான சாலையை இனி எளிதாக கடக்க முடியும்.
மதுரவாயல் பாலம்: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான கட்டுமானம் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. டெண்டர் பணிகளும் விரைவாக முடிந்துள்ளன. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது.
இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிளி மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே.
இந்த கட்டுமான பணிகள் எல்லாம் நிறைவுபெற்ற பின் விரைவில் சென்னையில் சாலை போக்குவரத்து இன்னும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications