பாக்யலட்சுமி செஞ்ச பயங்கரம்.. சென்னை விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்டு.. ஷாக்!
சென்னை: சென்னை விமான நிறுவன ஊழியர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்து உடலை சூட்கேசிலும், கட்டைப் பையிலும் எடுத்து சென்று புதைத்த அழகி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதாகும் ஜெயந்தன் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார் ஜெயந்தன்.
கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மதியம் நங்கநல்லூரில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து வேலைக்காக சென்னை விமான நிலையத்துக்கு ஜெயந்தன் புறப்பட்டு சென்றார். அவர் வேலைக்க போகும்போதே, பணி முடிந்ததும், அப்படியே சொந்த ஊரான விழுப்புரம் போய்விட்டுதான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

செல்போன்
ஆனால் அதன்பிறகு ஜெயந்தன் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அவரது சொந்த ஊருக்கும் போகவில்லை. அக்கா வீட்டுக்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அக்கா, செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் ஜெயந்தனின் செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில் பழவந்தாங்கல் போலீசார், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவைகளை வைத்து ஆய்வு நடத்தியபோது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது.

பாலியல் தொழில்
இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1-ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண், முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்திருக்கிறார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார்.

கோவளம் கடற்கரை
மேலும் ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப்பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்துச்சென்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை ஜெயலட்சுமி கூறியிருக்கிறார். இந்த கொலைக்கு, தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் பாக்யலட்சுமி கூறியிருக்கிறார்.

கல்யாணம்
மேலும் போலீசாரிடம் பாக்கியலட்சுமி கூறுகையில், நான் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என்னை ஜெயந்தன், தாம்பரத்தில் உள்ள ஒரு விடுதியில் முதலில் சந்தித்தார். அதில் பழக்கம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் வைத்து என்னை அவர் கல்யாணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டில் நான் ஜெயந்தனை விட்டு பிரிந்து விட்டேன். கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறில் ஈடுபட்டார். அதனால் தான் அவரை நான் கொனறுவிட்டேன் என்றார்.

பாக்யலட்சுமி தகவல்
இதையடுத்து தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து, சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தில் உடலை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெயந்தன் கொலை நடந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் அந்த மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொலைக்கான காரணம், கொலை எப்படி நடந்து என்பது உடலை கைப்பற்றிய பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications