சென்னை ஆடிட்டரை கொலை செய்தது ஏன்?.. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை: சென்னை ஆடிட்டர் கொலை வழக்கு விசாரணையில் கொலையாளி பல அதிர்ச்சி தகவல்களை அளித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் (48). கடந்த 27ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு சென்ற இவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதையடுத்து இவரது மனைவி பூர்ணிமா கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் ஆடிட்டர் ஜனரஞ்சனை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொன்றுவிட்டதாகவும் சாமல்பட்டி அருகே மாந்தோப்பில் புதைத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், சபரீஷ், ஜிம் மோகன் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி
கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சபரீஷ் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல அதிர்ச்சியான தகவல்களை அளித்துள்ளார். சபரீஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வந்த போது விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

சபரீஷுக்கு பழக்கம்
அப்போது வழக்கறிஞர் கிருஷ்ணகுமாருடன் சபரீஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் வங்கியில் தனக்கு ரூ 35 கோடி கடன் வாங்குவதற்கு உதவி செய்யும் படி கேட்டுள்ளார் சபரீஷ். அதற்கு அவர் தனது நண்பரான ஆடிட்டர் ஜனரஞ்சனை அறிமுகம் செய்து வைத்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி. பின்னர் சபரீஷும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியும் ஜனரஞ்சனை நேரில் சந்தித்துள்ளனர்.

ரூ 3.5 கோடி கமிஷன்
அப்போது நடந்ததை ஜனரஞ்சனிடம் சொன்ன போது ரூ 30 கோடிக்கு கடன் பெற்று தருவதாகவும் அதற்கு கமிஷனாக ரூ 3.50 கோடியை தனக்கு தர வேண்டும் எனவும் ஜனரஞ்சன் தெரிவித்திருந்தாராம். அவர் கேட்ட பணத்தை சபரீஷ் கொடுத்துள்ளார். ஆனாலும் ஜனரஞ்சன் கடனை வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளார். இதன் பின்னர் சபரீஷும் பெரம்பலூருக்கு வந்துவிட்டார்.

ஹைதராபாத்தில் மோசடி
இந்த நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக ஜனரஞ்சன் பிரதானை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த செய்தியை பார்த்த சபரீஷ் சிறைக்குச் சென்று அவரை பார்த்துள்ளார். அப்போது தன்னை ஜாமீனில் எடுத்தால் பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக சபரீஷிடம் ஜனரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சபரீஷ் பண உதவி
இதைத் தொடர்ந்து சபரீஷ் பண உதவி செய்து ஜாமீனில் எடுத்துள்ளார். ஆனாலும் ஜனரஞ்சன் சபரீஷுக்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இந்த நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமாரும் சபரீஷும் தனக்கு தெரிந்த ஒருவருக்கு கடன் வாங்கித் தர வேண்டும் என்றும் அவரும் பேசியபடி கமிஷனை கொடுத்துவிடுவார் என்றும் கூறி ஜனரஞ்சனை சாமல்பட்டிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பணம் கொடுத்தல்
பின்னர் அங்கு திருமால் என்பவரின் வீட்டில் அவர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்குமாறு சபரீஷ் ஜனரஞ்சனிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது உருட்டுக்கட்டையால் ஜனரஞ்சனை சபரீஷ் உள்ளிட்டோர் தாக்கினர். இதனால் ஜனரஞ்சன் இறந்ததை அடுத்து அவரை மாந்தோப்பில் புதைத்துவிட்டதாகவும் சபரீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications