"நீங்க இப்படி இருக்கணும்".. சென்னை மேயரை சந்தித்த நயன்தாரா.. இதென்ன புது கூட்டணி.. என்ன பேசினார்கள்?
சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்து நயன்தாரா வாழ்த்து கூறினார்
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பிரபல நடிகை நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ நேற்று முதல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக சார்பில், சென்னை மாநகராட்சியின் 74வது வார்டில் போட்டியிட்டவர் பிரியாராஜன்..
இந்த முறை, சென்னை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.. முதன்முறையாக பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாலும் கடும் போட்டி நிலவி வந்தது.

பிரியா ராஜன்
சென்னையை ஆளப்போகும் 3வது பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த 2 மாதங்களாகவே தமிழகத்தை சூழ்ந்திருந்தது. இறுதியில் 28 வயதாகும் பிரியாராஜன், மேயராக தேர்வானார்.. தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 6,299 வாக்குகள் அதிகம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.. மாநகராட்சியின் மேயராகவும் பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார்.. இளம் வயது மேயர் என்ற பெருமையையும் பிரியா பெற்றுள்ளார்.

எதிர்பார்ப்பு
முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்திதான் இவர்.. சென்னை பல்கலைக்கழகத்தில் எம்காம் படித்துள்ளார்.. இவரது கணவர் கே.ராஜா, திமுக பகுதி செயலாளராக பொறுப்பில் உள்ளார்.. இப்போது சென்னையையும் தாண்டி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்..தன்னுடைய முதல்பேச்சிலேயே அனைவரையும் அசர வைத்தார் பிரியா.. தன்னுடைய கனவு பணியாக சென்னை பெருநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியே தனது தலையாய பணி என்றும் குறிப்பிட்டுள்ளது சென்னைவாசிகளுக்கு நம்பிக்கையை தந்து வருகிறது..

நயன்தாரா வாழ்த்து
இந்நிலையில், இவரை நடிகை நயன்தாரா நேற்றைய தினம் திடீரென சந்தித்துள்ளார்.. தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் நயன்தாரா. அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சி பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசினார்.. மேயராக பதவி ஏற்று கொண்டதற்கு பிரியாவுக்கு, நயன்தாரா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இப்போது ஏற்றுள்ள பதவியில் சிறந்து விளங்க வேண்டும், மற்றவர்களுக்கும் ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று நயன்தாரா பிரியாராஜனிடம் தெரிவித்தார்.

திடீர் கூட்டணி
2 பேருமே அப்போது ஒன்றாக நின்று போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்.. இந்த போட்டோக்கள் தான் நேற்றில் இருந்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியா முழுவதும் இந்த போட்டோ ஷேர் ஆகி வருகிறது.. லேடி சூப்பர் ஸ்டார் ஒருவேளை திமுகவுக்கு வர போகிறார்களா என்று பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இவர்கள் ஒன்றாக போஸ் கொடுக்கும் போட்டோவை பார்த்துவிட்டு, "அட, இந்த கூட்டணி நல்லா இருக்கே" என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications