'வீட்டு உரிமையாளர்களே இதை மட்டும் பண்ணீடாதீங்க'.. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை
சென்னையில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை: சென்னையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சட்ட விரோதமாக இணைக்கப்பட்டு இருந்த கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகாலில் திருட்டுத்தனமாக கழிவுநீரை விட்ட 1470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை மாநகரம் சமதள பரப்பினை கொண்டுள்ளதால் சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டு மழைநீர் வடிகால் கட்டமைப்பு சென்னை மாநகருக்கு மிக அவசியமாகும். மேலும் சென்னை மாநகரத்தின் சராசரி நிலத்தின் மட்டம், குறைந்தபட்ச கடல் மட்டத்திற்கு 2 மீட்டர் மேலே மட்டுமே உள்ளது.
இவ்வாறு நிலப்பரப்பு சமதளமாக உள்ளதாலும், கடல் அலைகளின் தாக்கத்தினாலும், சென்னை மாநகரத்தில் மழைகாலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குதலும், வெள்ளப்பெருக்கம் ஏற்படுகிறது. எனவே, தாழ்வான பகுதிகளையும் மற்றும் வெள்ளப்பாதிப்பிற்கும் உட்படும் பகுதிகளையும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மீட்க மழைநீர் வடிகால் கட்டமைப்பு மிகவும் அவசியமாக இருக்கிறது.

அடையாறு கூவம் நதிகள்
பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, சென்னை மாநகரில் 1894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்வடிகால் கட்டமைப்புகளையும், சென்னை மாநகரில் ஓடும் 30 கால்வாய்களையும் பராமரிக்கின்றது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் கடலில் கலக்கிறது.

எப்படி அமைக்கப்படுகின்றன
சென்னையில், பொதுவாக மழைநீர் வடிகால்கள் 7 மீட்டர் மற்றும் அதற்குமேல் அகலம் உள்ள சாலைகளில் அமைக்கப்படுகின்றன. வடிகாலின் குறைந்த பட்ச அளவு 600×700 மி.மீ ஆக உள்ளது. வடிகாலின் அளவு நீர்பிடிப்புப்பகுதி, நிலத்தின் அமைப்பு மற்றும் வெளியேறும் நீரின் அளவு ஆகியவைகளைப் பொறுத்து வடிவமைக்கப்படுகிறது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில், சாலையின் அகலம் எவ்வாறு இருந்தாலும், தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்கள் வடிவமைக்கப்படுகிறது.

மனித நுழைவு வாயில்
சென்னையில் மழைநீர் வடிகாலின் உயரம், சாலையின் மட்டத்திலிருந்து 6 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்கிறது. வடிகாலின் மேற்புற தளத்தின் உயரமும் மனிதநுழைவாயிலின் மூடியும் நடைபாதையின் மட்டத்திற்கு சமமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை குறுக்கில் அமைக்கப்படும் மழைநீர் வடிகாலின் மேற்புற தளத்தின் மட்டம் சாலையின் மட்டத்திற்கு சமமாக இருக்க வேண்டு என்பதை சென்னை மாநகராட்சி பராமரிக்கிறது. வடிகால்கள் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமைக்கப்படுவதுடன் ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளியிலும் (SFRC/FRP) ஸ்டீல் பைபர் ரீ இன்போர்ஸ்ட் கான்கிரீட்/ பைபர் ரீஇன்போர்ஸ்ட் பாலிமர் ஆகியவைகளினால் செய்யப்பட்ட மனித நுழைவாயில் மூடிகள், சூட் பைப்கள், (மழைநீர் வழிந்தோடும் குழாய்) அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் கால்வாய்
சென்னை மாநகராட்சி மழைநீர் செல்வதற்காக 30 கல்வாய்களை பராமரித்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு;k வருகிறது. மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே சிலர் திருட்டுத்தனமாக கழிவு நீர்களை இணைத்து விடுகிறார்கள். இதனால் கழிவுநீர்கள் அடைத்து மழைநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளக்காடாக அந்த பகுதிகள் மாறிவிடுகிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனால் தான் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில், 04.02.2023 முதல் 17.02.2023 வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,09,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications