கொதி கொதிக்குதே! புயல் வருவது எல்லாம் இருக்கட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த பரபரப்பு வார்னிங்!
சென்னை: சென்னையில் இன்று நிலவும் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.
மாறாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

வெதர்மேன்: இந்த நிலையில்தான், சென்னையில் இன்று நிலவும் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தனது போஸ்டில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களும் மதியம் 1.00 மணிக்கு 40 டிகிரி செல்ஸியஸை தாண்டிவிட்டன. நுங்கம்பாக்கத்தில் 40.5 டிகிரி செல்ஸியஸை ஐ தாண்டியுள்ளது. அதே சமயம் MRC நகர் போன்ற கடலோரப் பகுதிகள் கூட 40.2 டிகிரி செல்ஷியஸில் கொளுத்துகிறது.
கடல் காற்று இன்னமும் கடலுக்கு மேலேதான் பார்க் செய்து உள்ளது. இனிமேல்தான் கடல் காற்று நகர வேண்டும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இது விரைவில் தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும்.
அதன்பின் இது புயலாக மாறும். அரபிக்கடலில் உருவாகி வரும் புயலுக்கு பைபர்ஜோய் புயல் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது அரபிக்கடலில் புயல் உருவாவது மிக மிக அபூர்வமான விஷயம். இது வங்கதேசம் வழங்கிய பெயர். இந்த புயலால் சென்னைக்கு எந்த மழையும் வர வாய்ப்பு இல்லை. இந்த நிலையில்தான் சென்னையில் இன்று வெப்பநிலை உயர்ந்து உள்ளதாக வெதர்மேன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications