அட்ராசக்க! நாடே எதிர்பார்க்கும் மெகா திட்டம்.. தாரேஸ் அகமதுவை டிக் அடித்த ஸ்டாலின்.. யார் இவர்?
சென்னை: நாடே எதிர்பார்க்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், உதயநிதி ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலமாக வழங்கப்பட இருக்கும் நிலையில், இந்த துறையின் செயலாளராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திமுக அரசின் மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத் தொகை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மூலமாக வழங்கப்படுகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று கலைஞர் பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உரிமைத்தொகை திட்டம்: தமிழ்நாடே, ஏன் ஒட்டுமொத்த நாடே, இந்த திட்டத்தை திமுக அரசு எப்படி வெற்றிகரமாக செயல்படுத்தப் போகிறது என்பதை உன்னிப்பாக உற்று நோக்கி வருகிறது. மிகப்பெரிய சமூக நலத் திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றுவதில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பொறுப்பு மிகுந்த நெருக்கடியானது என்றே கூறலாம்.
மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பெறுவது, பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பது, மாதந்தோறும், குடும்பத் தலைவிகளின் கணக்குகளில் ரூ.1000 உரிமைத்தொகையை வரவு வைப்பது என நிர்வாக ரீதியாக தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டிய பணி உள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு சவால்: அரசியல் ரீதியாவும் பல்வேறு சவால்களை உதயநிதி ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டி வரும். உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள், இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெளியிட்டுள்ள நெறிமுறைகளே எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களாக வெடித்துள்ளன. அனைவருக்கும் உரிமைத்தொகை என்று சொல்லிவிட்டு, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதால் எதிர்க்க்ட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையில் எத்தனையோ திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செயல்படுத்தி இருந்தாலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அவருக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கப்போகிறது. ஏராளமான பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

தேர்தல் மைலேஜ்: ஏனெனில், ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீது, 2021 சட்டமன்றத் தேர்தலின் போதிலிருந்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஈரோடு இடைத்தேர்தலில் கூட இந்த திட்டத்தை செயல்படுத்தாததை சுட்டிக்காட்டியே அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவை விமர்சித்தன. 2024 தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கிய பங்காற்றும் என்பதை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்புமே அறிவார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்பு சவாலாக இருக்கும் நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையராகப் பணியாற்றி வந்த டாக்டர் தரேஸ் அகமது, உதயநிதி வசம் இருக்கும் துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தாரேஸ் அகமது: நிர்வாகப் பணிகளில் பெயர் பெற்றவர் தாரேஸ் அகமது. கேரளாவைச் சேர்ந்த இவர், 1993ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐஏஏஸ் அதிகாரி. மருத்துவக் கல்வி முடித்தவர். 2019 காலகட்டத்தில் படிப்பதற்காக சிறப்பு விடுப்பு எடுத்துக்கொண்டு லண்டன் சென்று ஹெல்த் பாலிசி பிளானிங் மற்றும் ஃபைனான்சிங்கில் உயர்கல்வி மேற்கொண்டு திரும்பியவர்.
தாரேஸ் அகமது, மதுரை மாவட்டத்தில் உதயச்சந்திரன் கலெக்டராக இருந்தபோது உதவி கலெக்டராக இருந்தார். அப்போதுதான் பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது, பெண் குழந்தைகளைக் காக்கும் சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, தாரேஸ் அகமது பெற்றார்.
சாதனை அதிகாரி: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியபோது, நூற்றுக்கணக்கான குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளார் தாரேஷ் அகமது. ஒரு மதத்தைச் சேர்ந்த திருமணத்தை தடுத்ததற்காக தாரேஸ் அகமதுவுக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்தினர். ஆனாலும், பெண் குழந்தைகள் எந்த மதத்தவர் என்றாலும் சட்டத்தின் முன் ஒன்றுதான் எனக் கூறி தனது ஆக்ஷனில் உறுதியாக இருந்தார் தரேஷ் அகமது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்ட தாரேஸ் அகமது, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கும் திட்டத்தை முன்னெடுத்தார். இந்த பயிற்சியில் படித்த மாணவர்கள், சிறந்த மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் படித்து பெரிய நிறுவனங்களில் பணிகளில் சேர்ந்தனர்.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை: மேலும், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் முறையாக நடத்தி, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும் வரை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்தார். தாரேஷ் அகமதுவின் முயற்சியால் சுமார் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடன் பெற்று பலனடைந்துள்ளனராம். அவர்கள் தாரேஷ் அகமதுவை என்றென்றும் நினைவுகூர்கிறார்கள்.
பின்னர், தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய தாரேஸ் அகமது அங்கும் சிறப்பாகப் பணியாற்ரினார். அதன் பிறகுதான் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கையில் இருக்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தாரேஸ் அகமது.
திரும்பிப் பார்க்க வைத்த அறிவிப்பு: பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள், சமூக நீதி திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாநில அரசின் பாராட்டு விருதுகள், பிரதமர் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள தாரேஸ் அகமது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறையின் செயலராகப் பொறுப்பேற்றுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் விரைவில் சூடுபிடிக்க உள்ளன. இதனை திறம்பட கண்காணிக்கும் பொறுப்புக்கு வந்திருக்கிறார் தாரேஸ் அகமது. முதல்வர் ஸ்டாலின் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications