புழல் சிறையில் விஜய் ஆய்வு செய்தது! உணவை சாப்பிட்டது! எல்லாமே ஜோதிட பரிகாரம்! திமுக அட்வகேட் பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய், புழல் சிறைக்கு சென்றது ஒரு விதமான ஜோதிட பரிகாரத்திற்காக என வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார். அது போல் அங்குள்ள உணவை உட்கொண்டு பார்த்ததும் பரிகாரமே என அவர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து திமுகவை சேர்ந்த வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான கண்ணதாசன் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு முதல்வர் சிறைக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஒரு முதல்வராக சிறைக்குள் வந்து எவற்றை பார்க்க வேண்டும் என்ற நீதி இருக்கிறது. சிறைக்கு சென்று அங்கு எல்லா உணவையும் சுவைத்து பார்ப்பது என்பதை விட அந்த "பார்வைப்படி"யில் இருக்கும் உணவுகளை தான் ருசி பார்க்க முடியும்.

CM Vijay reviews Puzhal Prison

அதாவது பார்வைப்படியில் இருப்பது ஒன்று சிறைவாசிகளுக்கு வேறு உணவு வழங்கப்படும். எனவே பார்வைப்பிடியில் இருக்கும் உணவை சுவைத்து பார்ப்பது என்பது வழக்கமாக எல்லோரும் செய்யக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். தமிழகத்தில் எந்த முதல்வர்களும் சிறைக்கு சென்று பார்த்ததில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட 2003 ஆம் ஆண்டு புழல் சிறைக்கு அடிக்கல் நாட்ட வந்திருந்த போது ஹெலிகாப்டரில் வந்த அவர் வெளியே இருந்த மைதானத்தில் இருந்தபடியே அடிக்கல் நாட்டினார்.

அது போல் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் 2006 ஆம் ஆண்டு அந்த புழல் சிறையை திறந்து வைத்தார். ஆனால் அவர் உள்ளே செல்லவில்லை. தற்போதைய முதல்வர் விஜய் சிறைக்கு வந்து பார்ப்பது இது இரண்டாவது முறை.

2002 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் வந்து எல்லாருக்கும் பிரியாணி கொடுத்தார். அதனால் கோபமடைந்த ஜெயலலிதா சிறை கண்காணிப்பாளரை கடலூருக்கு மாற்றினார்.

தற்போது விஜய்யின் திடீர் புழல் சிறை விசிட்டிற்கு ஜோதிட ரீதியாக காரணங்கள் இருக்கக் கூடும். திரைப்பிரபலங்கள், முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் சிறை தண்டனையைத் தவிர்க்க அல்லது பரிகாரத்திற்காக சிறைக்குச் சென்று வருவது வழக்கமாக ஒன்று.

புழல் சிறையில் மூன்று வகையான சிறைகள் உள்ளன. விசாரணை சிறை, தண்டனை சிறை, பெண்கள் சிறை. இதில் முதல்வர் விஜய் தண்டனை சிறையை மட்டும் பார்வையிட்டார். இங்கு குறைவான எண்ணிக்கையில் கைதிகள் இருப்பார்கள். அங்கு வைத்திருந்த உணவை விஜய் சுவைத்தார். எனவே அவர் விசாரணை சிறைக்கும் பெண்கள் சிறைக்கும் செல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கண்ணதாசன் தெரிவித்தார்.

சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிறை கைதிகளுக்கான உணவு, பாதுகாப்பு, மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். புழல் சிறையில் உள்ள காவல் நிலையத்திற்கும் அவர் சென்று ஆய்வு நடத்தியிருந்தார். இதுவரை புழல் சிறைக்குள் எந்த முதல்வரும் சென்று ஆய்வு நடத்தாத நிலையில் விஜய் மட்டும் ஏன் ஆய்வு நடத்தினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+