நெல்லை, தூத்துக்குடி பக்கமே போகாத காங்கிரஸ் தலைகள்.. ராகுலுக்கு போன தகவல்! வந்து விழுந்த பரபர பதில்
சென்னை: தூத்துக்குடியில் எம்பி கனிமொழி தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார். அதேபோல் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருநாள் இங்கே விசிட் அடித்தார்.
தென் தமிழ்நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் தொடர்ந்து அங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்னும் அங்கே வெள்ளம் முழுமையாக வடியவில்லை. ஒரு சில இடங்களில் 10 அடிக்கு கூட வெள்ளம் இன்னமும் உள்ளது.

அமைச்சர்கள் சென்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லைக்கு ஏற்கனவே சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டார். அமைச்சர்கள் உடனே நெல்லைக்கு புறப்பட வேண்டும், தென் மண்டல எம்பிக்கள் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். அதன் அடிப்படையில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நெல்லைக்கு சென்று அங்கே மீட்பு பணிகளை செய்தார்.
கனிமொழி வந்தார்: இன்னொரு பக்கம் டெல்லியில் இருந்து அவசர அவசரமாக தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி புயல் அன்று காலை வந்தார் . அங்கே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக அவர் மீட்பு பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். டெல்லியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக இருந்த கனிமொழி அவசரமாக தூத்துக்குடிக்கு வந்தார்.
தூத்துக்குடியில் எம்பி கனிமொழி புயல் அடித்த நாளில் இருந்தே தீவிரமாக பணிகளை செய்து வருகிறார் . முதல் நாளில் இருந்து இப்போது வரை தீவிரமாக புயல் நிவாரண பணிகளை அவர் செய்து வருகிறார்.
ராகுல் காந்தி: இப்படிப்பட்ட நிலையில்தான் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பாதிப்புகளையும், அசூர பேய் மழையால் தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட பாதிப்புகளையும் பார்வை யிட ராகுல்காந்தி தமிழகம் வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தனர். அங்கே காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது. இருந்தும் காங்கிரஸ் தலைவர்கள் அங்கே சென்று பார்வையிடவில்லை.
ஜாதி வாக்குகள்: இதுகுறித்து கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் எப்போதும் காங்கிரஸுக்கு செல்வாக்கான மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் உள்ள நாடார் சமூகம் மற்றும் கிறுஸ்துவ, இஸ்லாமிய மதத்தினரிடம் காங்கிரசின் வோட் பேங்க் கணிசமாக இருக்கிறது.
தவிர தேசிய சிந்தனை உள்ளவர்கள். அப்படிப்பட்ட அந்த மாவட்ட மக்கள் பாதுக்கப்பட்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் தென்மாவட்டங்களுக்கு விசிட் அடித்தால் நாடாளுமன்ற தேர்தலின் போது நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று அரசியல் ரீதியாக கார்கேவிடம் சொல்ல, அதனை ராகுல் காந்தியிடம் தெரியப்படுத்தியிருக்கிறார் கார்கே.
ராகுல் காந்தி திட்டம்: அதனை ஆமோதித்துள்ள ராகுல்காந்தி, முதலில் காங்கிரஸ் தலைவர்களையும் எம்.பி.க்களையும் எம்.எல்.ஏ.க்களை யும் களத்துக்குப் போக சொல்லுங்கள் என்றாராம். ஆனால், அவர் வருவது குறித்து எதுவும் சொல்லாததால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ப்தியடைந்து ள்ளனர்.
தென் மாவட்ட போட்டி: முக்கியமாக தென் மாவட்டங்களில் காங்கிரஸ் இந்த லோக்சபா தேர்தலில் அதிகமாக போட்டியிடும் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக குமரி, நெல்லையில் காங்கிரஸ் குறி வைக்க வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைகள் யாரும் அங்கே இல்லாமல் போனது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications