ஆசையிலும் ஆசை.. தமிழக காங்கிரசுக்கு வந்த பேராசை.. இதை திமுகவே எதிர்பார்க்கல.. பாஜக கவனிக்குதே! பலே
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் பேச்சுதான், சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது?
2 நாட்களுக்கு முன்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தர்மபுரியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பிறகு தொண்டர்களிடம் பேசும்போது சில விஷயங்களை விரிவாக கூறியிருக்கிறார். இதுகுறித்த செய்திகள் மீடியாக்களிலும் வெளியாகியிருந்தது.

செல்வப்பெருந்தகை: அதாவது செல்வப்பெருந்தகை பேசும்போது, "கடந்த 57 வருஷமாக நாம ஏமாந்ததெல்லாம் போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வளர வேண்டும்..
இத்தனை வருடமும் நாம் அமைதியாக இருந்துவிட்டோம். இதோ, வீணாக பதவியை பெற்று பலர் வீட்டில் தூங்குகிறார்கள். இன்று கொடி பிடிக்க கூட தயங்குகிறார்கள்.. இருப்பது கொஞ்சம் பேர்தான். அதற்குள் இத்தனை கோஷ்டிகளா? அவமானமாக இருக்கு.. இனிமேல் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
தொகுதிகள்: எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம், "எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள்" என்று கையேந்தி நிற்பது? தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது நாம் சீட்டுக்காக கையேந்தும் நிலையில் இருப்பதை பார்த்து, ரொம்பவே கவலைப்பட்டார்.. அதனால், காமராஜர் ஆட்சி மறுபடியும் மலர பாடுபட வேண்டும்" என்றார்.
இதற்கு பிறகு, நேற்று முன்தினம் நாமக்கல்லில் செல்வப்பெருந்தகை பேசும்போது, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் உள்ள நிலையை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அங்கெல்லாம் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை நாம் ஏன் அத்தகைய நிலைக்கு கொண்டுவரக் கூடாது? எங்கள் தலைமுறையிலேயே காங்கிரஸ் ஆளுங்கட்சியாக கொண்டுவர பாடுபட வேண்டும் என்று கூறிய செல்வப்பெருந்தகை, நாமக்கல்லில் முதன்மை கட்சியாக, காங்கிரஸ் வர வேண்டும் என்றும் ஒரே போடாக போட்டார்.
சலசலப்பு: செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சுக்கள் பெரும் சலசலப்பையும், நிறைய சந்தேகங்களையும் உண்டுபண்ணியது.. இன்னொரு கட்சியிடம் கையேந்தும் நிலைமை என்றால், செல்வப்பெருந்தகை யாரை சொல்கிறார்? திமுகவையா? தமிழகத்தை காங்கிரஸ் ஆள வேண்டும் என்றால், திமுக என்னாகும்? என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் விவாதங்களும் வெடித்தன.
இதையடுத்து, நேற்றைய தினம் இந்த சந்தேகங்களை எல்லாம் செய்தியாளர்கள், செல்வப்பெருந்தகையிடமே கேட்டார்கள்.. அதற்கு செல்வப்பெருந்தகை விளக்கம் ஒன்றை தந்திருக்கிறார்.
தவறு ஏதும் இல்லை: "தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட, நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார்கள்.. அதனால்தான், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் என்று சொன்னேன்.. அதில் எந்தவிதமான தவறும் இல்லை. இது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. 57 ஆண்டாக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கும்போது, இப்போது அந்த அந்த முயற்சியை மறுபடியும் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
எங்கள் கட்சியை நாங்கள் வலிமைப்படுத்தினால், தோழமை கட்சிகள்தான் வலிமை பெறும். எங்கள் கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவது எங்களின் ஜீவாதார உரிமை.. கட்சியின் கட்டமைப்பை சரிசெய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை நாங்கள் செய்கிறோம்..
தோழமை: அதேசமயம், நாங்கள் திமுகவுடன் உண்மையான தோழமையோடு இருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவது வேறு, தோழமை என்பது வேறு. இந்த இரண்டையும் நீங்கள் ஒன்றாக பார்க்கக்கூடாது.
நாங்கள் திமுகவோடு இணக்கமாகவே இருக்கிறோம். கூட்டணி கட்சிகளால் நிர்வாகிகளுக்கு சில சங்கடங்கள் இருக்கிறது என்றாலும், நிர்வாகிகளுக்கு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. எனவே, அதை நாங்கள் முன்னெடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை" என்றார் மாநில காங்கிரஸ் தலைவர்.
விளக்கம்: இப்படி ஒரு விளக்கம் தந்தபிறகும், சலசலப்புகள் இன்னமும் கூட்டணிக்குள் அடங்கவில்லை.. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தயவில்தான் காங்கிரஸ் நிற்க முடியும் என்ற நிலைமை உருவாகி அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது.. அதுவும் இல்லாமல், இதுவரை பொறுப்பிலிருந்த எந்த தலைவர்களும், "தனித்து போட்டி" என்ற ரிஸ்க்கை எடுக்கவில்லை..
ஆனால், புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் செல்வப்பெருந்தகை கட்சியை கட்டமைத்து தூக்கி நிறுத்த போவதாக மாவட்டம் வாரியாக சென்று கொண்டிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பலனை பெற்றுத்தருமா? என்ற எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.. பொறுத்திருநது பார்ப்போம்..!!
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications