Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவாஸ்கரே சொன்னாரு.. தோனி கவனிக்காமல் செய்த சிறிய தவறு.. சிஎஸ்கே வெற்றியை மிஸ் செய்த தருணமே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவேளை கவாஸ்கர் நேற்று போட்டிக்கு முன்பு கூறியபடி தோனி பேட்டிங்கில் சற்று முன்வரிசையில் களமிறங்கியிருந்தால் போட்டி சிஎஸ்கே வசம் வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

வெற்றிகரமாக போட்டியை முடிப்பதில் வல்லவரான தோனி, நேற்று வெற்றிகரமாக மேட்சை முடிக்கவில்லை. எப்படியும் வெல்வோம் என்று நினைத்த சிஎஸ்கே ரசிகர்கள்,4 ரன்னில் தோற்றதை ஜீரணிக்க முடியாமல் ட்விட்டரில் தங்களது மனகுமுறல்களை கொட்டி வருகிறார்கள். சிஎஸ்கே ராஜஸ்தான் ராயல்ஸ் மேட்ச் தான் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப்பில் தமிழ் ரசிகர்களால் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

why csk not win? Has Dhoni taken the field earlier, the match would have been in CSK hands

இந்த தோல்வி சென்னை ரசிகர்களை இந்த அளவிற்கு பாதிக்க காரணம், தோனி களத்தில் இருந்து கடைசியில் தோல்வியை சந்தித்தது தான். அதுமட்டுமின்றி, சென்னை தொடர்ச்சியாக ராஜஸ்தான் அணியிடம் 6 முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை ரசிகர்களை மேலும் சோகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம், சென்னை ரசிகர்கள் தோல்விக்கு பல காரணங்களை கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி கொஞ்சம் மாற்றி யோசித்து இருந்தால், வெற்றி சிஎஸ்கே வசமாகி இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக ஸ்டார் ஸ்போட்ஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்த இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், எம்எஸ் தோனி பேட்டிங் வரிசையில் முன்பே களம் இறங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இதனால், அவர் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று ஓவர்களுக்கு மேல் விளையாட முடியும். அவரால் மிகப்பெரிய ரன்களை அடிக்க முடியும் என்பதால், தனது பேட்டிங் மூலம் சிஎஸ்கேவில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று கூறியிருந்தார்.

ஆனால் தோனி அப்படி செய்யவில்லை. எப்போதும் போல் மிகவும் நெருக்கடியான நிலை ஏற்பட்ட பிறகே களம் இறங்கினார். தோனி மட்டும் பேட்டிங்கில் சற்று முன்வரிசையில் களமிறங்கியிருந்தால் போட்டி சிஎஸ்கே வசம் வந்திருக்கலாம் என்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பதற்கு காரணத்தையும் பாருங்கள்.

why csk not win? Has Dhoni taken the field earlier, the match would have been in CSK hands

ராஜஸ்தான் ராயல் அணி உடனான நேற்றைய ஆட்டத்தில் மட்டுமே தோனி 10 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 7 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 ரன்களையும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 பந்துகளில் 12 ரன்களையும் தோனி எடுத்திருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் 17 பந்துகளை எதிர்கொண்ட தோனி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 32 ரன்களை எடுத்திருந்திருந்தார். எனவே கவாஸ்கர் கூறியபடி கொஞ்சம் முன்பே தோனி களம் இறங்கி இருந்தால், வெற்றி சிஎஸ்கே வசமாகி இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

தோனியும் இதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.. அவர் போட்டி முடிந்த பின்னர் பேசுகையில், நங்கள் பேட்டிங் செய்யும்போது மிடில் ஓவர்களில் அதிக பந்துகளை ரன்கள் எடுக்காமல் வீணடித்துவிட்டோம். மிடில் ஓவர்களில் கூடுதல் ரன்களை எடுத்திருக்கலாம் . நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தனது 200வது போட்டியை வெற்றிகரமாக முடிக்க விரும்பிய தோனிக்கு நேற்று நடந்தது பெரும் வருத்தத்தை தந்திருக்கும். விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்பதால், சாதாரணமாகவே தோனி கடந்திருப்பார். ஏன்னனா கப்பு முக்கியம் பிகலு.. தோனி வெற்றிகரமான கேப்டன் என்பதால், இந்த முறை கோப்பையுடன் விடைபெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+