தம்பி என வாழ்த்திய சிடிரவி! அண்ணா என நன்றி கூறிய மத்தியமைச்சர் எல் முருகன்! ஒரே பூரிப்பு.. என்னாச்சு
சென்னை: மத்திய அமைச்சர் எல் முருகன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் எல் முருகன். இவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு பிறந்தநாளாகும். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் வாழ்த்து
எல் முருகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‛‛புதிய இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து உழைக்கும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். குடும்பம், சமூகம் மற்றும் தேசத்திற்கான நமது பொறுப்புகளை மேற்கொள்ள புதுஆற்றலுடன் நம்மை புதுப்பித்து கொள்ள பிறந்தநாள் உதவும். தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்காக உங்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது. நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்'' என வாழ்த்து தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு நன்றி
இதையடுத்து பிரதமர் மோடிக்கு, எல் முருகன் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், ‛‛பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு நன்றி. உங்களின் மதிப்புமிக்க வாழ்த்துகளும், அன்பான வாழ்த்துகளும் நாட்டுக்காக உழைக்க வேண்டியதற்கான ஆற்றலை அதிகம் கொடுக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

தம்பி... அண்ணா..
இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, எல் முருகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிடி ரவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மத்திய அமைச்சரும் அன்பு தம்பியுமான எல் முருகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துட்ன வாழ முருகனை வேண்டிக்கொள்கிறேன். இந்தியா மீது நீங்கள் கொண்ட கனவுகள் நனவாகட்டும்'' என தெரிவித்துள்ளார். இதற்கு அண்ணா என எல் முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பிற பாஜக தலைவர்கள், பிற மாநில தலைவர்கள், மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என பல்வேறு தரப்பினர் எல் முருகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications