இவரை ஏன் டீமில் வச்சு இருக்கீங்க! "சிங்கத்தை" அசிங்கப்படுத்திய ரோஹித்? புவி போதுமா? குமுறும் ஃபேன்ஸ்
சென்னை: இந்திய அணியில் இளம் வீரர் ஒருவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்திய அணியில் பொதுவாக ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அணி தேர்வில் கேப்டன், கோச் முடிவு எடுக்க முடியாது.
தேர்வு வாரியம்தான் அணி தேர்வில் முடிவு எடுக்க முடியும். அணி தேர்வு செய்யும் வீரர்கள் 15 பேரில் 11 பேரை தேர்வு செய்யும் உரிமை மட்டுமே கேப்டன், கோச்சுக்கு இருக்கிறது.

சிஎஸ்கே
இந்திய அணி சமீபமாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்விகளை தழுவ இது முக்கிய காரணம் ஆகும். உதாரணமாக தேர்வு குழு செய்த தவறால் விஜய் சங்கர் போன்ற வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல திறமையான வீரர்கள் தேர்வுக்குழுவின் ஈகோ காரணமாக அணியில் இடம்பெறுவதே இல்லை. அப்படியே 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்தாலும் சில குறிப்பிட்ட வீரர்களுடன் கேப்டன், பயிற்சியாளருக்கு செட்டாகவில்லை என்றால் அவர்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இந்திய அணி
அப்படித்தான் இந்திய அணியில் தீபக் சாஹரை தொடர்ந்து ஒதுக்கி வருகின்றனர். தீபக் சாகர் சிறந்த ஸ்விங் பவுலர். பவர் பிளேவில் நன்றாக பவுலிங் செய்வார். புவனேஷ்வர் குமாருக்கு இணையாக பவுலிங் செய்வார். இப்போது புவனேஷ்வர் குமார் இருக்கும் பார்மிற்கு பார்த்தால் அவரை விட நன்றாகவே இவர் பவுலிங் செய்வார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கும் இவர் நன்றாக செய்ய கூடியவர்.

தீபக் சாஹர்
சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். அதேபோல் இலங்கைக்கு எதிரான டி 20 தொடங்கி பல தொடர்களில் இவரின் பேட்டிங் மிக சிறப்பாக இருந்துள்ளது. இந்திய அணிக்காக சில மேட்ச் வின்னிங் பேட்டிங் ஆட்டங்களை மேற்கொண்டு சாஹர் இருக்கிறார். இருந்தும் அவருக்கு இந்திய அணியில் பெரிய தொடர்களில் வாய்ப்பு வழங்கப்படுவதே இல்லை. கடந்த ஆசிய கோப்பை தொடரில் இவர் ஆடும் அணியில் எடுக்கப்படவில்லை.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார் மோசமாக ஆடியும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் கூட ஷமிக்கு பதிலாக வந்த உமேஷ் யாதாவிற்கு வாய்ப்பு கொடுத்தனர். உமேஷ் யாதவ் டெஸ்ட் பவுலர். அவர் நன்றாக டி 20 போட்டிகளில் ஆடியதே இல்லை. அவருக்கு வாய்ப்பு கொடுத்த ரோஹித் "சிஎஸ்கே" சிங்கங்களில் ஒருவரான தீபக் சாஹருக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை. இத்தனைக்கும் இந்திய பவுலிங் மோசமாக இருந்தது.

ஹர்ஷல் பட்டேல்
ஹர்ஷல் பட்டேல் காயத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளார். அவருக்கு கிடைக்கும் வாய்ப்பு சாஹருக்கு கிடைப்பது இல்லை. இதைத்தான் ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள். சாஹர் மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்து இருக்கிறார். பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுப்பார். அப்படி இருக்கும் போது அவரை தொடர்ந்து ஓரம்கட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். புவனேஷ்வர்குமார் இல்லாத நிலையில் இன்றைய போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications