Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலிக்கு மரணத்தை பிறந்த நாள் பரிசாக அளித்த திருநம்பி.. சென்னை ஈசிஆரில் கடைசி நிமிடம் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை தாழம்பூர் அருகே கை, கால்களை கட்டி பெண் என்ஜினீயரை தான் ஏன் எரித்து கொன்றேன் என்பது குறித்தது திருநம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.

சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அருகே பொன்மார் என்ற கிராமத்தில் தனியார் தண்ணீர் கம்பெனி செயல்படுகிறது. இதன் எதிரில் வேதகிரி நகர் பகுதியில் இன்னும் கட்டி முடிக்கப்படாத பழைய கட்டிடம் ஒன்று இருக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் அந்த பழைய கட்டிடத்தில் புகை வந்துள்ளது.

Why did a female software engineer get killed on Chennais East Coast Road? Thirunambis confession

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, பெண் ஒருவர் கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி லேசாக எரிந்த நிலையில் மயங்கி கிடந்தார். 2 கை மணிக்கட்டுகள், 2 கால் மணிக்கட்டுகள் மற்றும் வலது கழுத்து பகுதியில் பிளேடால் லேசாக அறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததுடன் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தாழம்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பெண் எரிக்கப்பட்டு இருந்த இடத்தில் கிடந்த செல்போனை கைப்பற்றி அதில் கடைசியாக பதிவாகி இருந்த எண்ணை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாழம்பூர் போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் நந்தினி (வயது 25) என்பதும், சாப்ட்வேர் என்ஜினீயரான அவர், மதுரை மாவட்டம் வடிவேல் நகர் ரவீந்திரன் என்பவருடைய மகள் என்பதும் தெரியவந்தது. நந்தினி துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

நந்தினியுடன் வேலை பார்க்கும் வெற்றிமாறன் (வயது 26) இந்த கொலையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை அடிப்படையில் தெரியவந்தது. இதையடுத்து வெற்றிமாறனை சனிக்கிழமை இரவே போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வெற்றிமாறனிடம் நடத்திய விசாரணையில், அவர் கடந்த 2019-ம் ஆண்டு பெண்ணாக இருந்து ஆணாக மாறி உள்ளார். இறந்து போன நந்தினியும் வெற்றிமாறனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் . நந்தினியும் வெற்றிமாறனும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். பள்ளியில் படிக்கும் போது பெண்ணாக இருந்த வெற்றிமாறன், பாண்டி முருகேஸ்வரி என்பது தான் அவரது நிஜப்பெயர். பெண்ணாகவே வளர்ந்த பாண்டி முருகேஸ்வரி, திருநம்பியாக மாறி வெற்றிமாறன் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

எம்.காம் முடித்த வெற்றி மாறனும், சாப்ட்வேர் என்ஜினியர் நந்தினியும் சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். வெற்றிமாறன் மப்பேடு பகுதியில் தங்கி வேலைக்கு போய் வந்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நட்பாகவே பழகி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலித்ததாக சொல்கிறாக்ள். ஒரு கட்டத்தில் நந்தினிக்கு வெற்றிமாறன் திருநம்பி என்று தெரிந்ததும், அவரைவிட்டுவிட்டு நந்தினி தன்னுடன் பணிபுரியும் வேறொருவரை காதலித்தாராம்.

இதனால் வெற்றிமாறன் ஆத்திரம் அடைந்து நந்தினியை கொலை செய்ய சந்தர்ப்பம் தேடி வந்தார். கடந்த டிசம்பர் 23ம் தேதி சாப்ட்வேர் என்ஜினியர் நந்தினிக்கு பிறந்தநாள். இதை பயன்படுத்தி கொண்ட வெற்றிமாறன் நந்தினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. பிறந்தநாளுக்கு வெளியில் செல்லலாம் என்று நைசாக நந்தினியை அழைத்து சென்றுள்ளார்.

இருவரும் பல இடங்களுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு பொன்மார் பகுதியில் பாதிகட்டப்பட்ட பழைய கட்டிடத்திற்கு வந்தார்களாம். அங்கு பரிசு தருவதாக அழைத்து சென்ற வெற்றிமாறன் பின்னர் நந்தினியின் கண்களை கட்டி பேசிக்கொண்டு , சர்ப்ரைஸ் தருவதாக நம்ப வைத்துள்ளார். பின்னர் திடீரென கை, கால்களை சங்கிலியால் கட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் பயந்து போன நந்தினி சத்தம் போட்டிருக்கிறார். அப்போது ஆத்திரத்தில் நந்தினியின் கை, கால் மணிக்கட்டை பிளேடால் வெற்றிமாறன் அறுத்துள்ளார். அதன் பின்னர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அங்கு இருந்து புகை வருவதையும் பெண்ணின் அலறல் சத்தத்தையும் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். தீயை அணைத்து ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சாப்ட்வேர் என்ஜினியர் நந்தினி சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.

தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை நந்தினி காதலித்ததால் ஆத்திரமடைந்து இந்த கொலையை செய்ததாக வெற்றிமாறன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திருநம்பியான வெற்றிமாறன், கொடூர சைகோ போல், காதலியை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+