மோடி காலில் கூட விழாத ரஜினிகாந்த்.. "ஆதித்யநாத்" காலில் விழுந்தது ஏன்? பின்னணியில் பெரிய பிளானாமே!
சென்னை; நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி ஹிட் அடித்து உள்ளது. இந்த படம் தமிழ்நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. வெகு காலத்திற்கு பின் ரஜினிகாந்திற்கு ஒரு வெற்றிப்படம் அமைந்துள்ளது.

ரஜினிகாந்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில், அவரின் ரசிகர்களே விமர்சனம் வைக்கும் விதமாக ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் பயணம் செய்துள்ளார். முதலில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உடன் இணைந்து ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்ப்பதாக இருந்தது.
ஆனால் ஜெயிலர் படம் பார்க்க ரஜினிகாந்த்திற்கு ஆதித்யாநாத் நேரம் ஒதுக்கவில்லை. ஜெயிலர் படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்க்காமல் துணை முதலமைச்சர் மௌரியாவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுப்பி வைத்த வைத்தார்.
இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் அவரும், படத்தை முழுமையாக பார்க்காமல் பாதியிலேயே எழுந்து சென்று உள்ளார்.
இதையடுத்து நேற்று மாலை ரஜினிகாந்த் முதல்வர் ஆதித்யநாத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அவர் வீட்டு வாசலுக்கு வந்த போதே ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்து மரியாதையை செய்தார். நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ரஜினி உறவு: பாஜகவுடன் இப்போது ஒன்றும் ரஜினிகாந்த் நெருக்கமாக வில்லை. அவர் பல காலமாகவே பாஜகவுடன் நெருக்கமாகவே உள்ளார். உதாரணமாக 2020ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அப்போதே அதற்கு பின் பாஜக இருப்பதாக கூறப்பட்டது.
அதன்பின் ரஜினிகாந்த் பல முறை பாஜகவிற்கு ஆதரவாக பேசினார். அதேபோல் பாஜகவின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாகவும் பேட்டி அளித்தார். இதில் முக்கியமானது.. ரஜினி திராவிட அரசியல் உள்ள தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் அளிப்பேன் என்றார். அவருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறப்பட்டது.
முக்கியமாக கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்றும் ரஜினி பேசினார். அவரின் கட்சியில் அண்ணாமலை அப்போது இணைய போவதாகவும் பேச்சுக்கள் வந்தன. ஆனால் கடைசியில் உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி அரசியலில் இருந்து விலகினார்.
ஆனால் என்னவோ அதன்பின் தொடர்ந்து பல்வேறு படங்களில் ரஜினி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில்தான் மீண்டும் பாஜகவுடன் நெருக்கம் ஆகும் விதமாக ரஜினிகாந்த் ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.
ஏன்?: இதில் ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது ஏன் என்று விவாதம் எழுந்துள்ளது. ஆதித்யநாத் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் இந்து மத துறவி, அவர் கோவில் பதவிகளிலும் இருக்கிறார், அவர் தலைமை பூஜாரியாகவும் இருக்கிறார். அதனால் அவரின் காலில் விழுந்தார் என்று ஒரு சாரார் கருத்து சொல்கின்றனர்.
ஆனால் மோடி காலில் விழாமல், ஆதித்யநாத் காலில் ரஜினி விழ வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதன்படி ஆதித்யநாத் எதிர்கால பிரதமராகும் வாய்ப்புகள் உள்ளதாக பாஜக கருதுகிறது. மோடிக்கு பின் யோகிதான், ஏன் 2024 தேர்தலில் கூட ஆதித்யநாத் பிரதமராக முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதை எல்லாம் மனதில் வைத்துதான் ரஜினிகாந்த் ஆதித்யநாத் காலில் விழுந்தார். இதனால்தான் மோடி காலில் கூட விழாத ரஜினி தன்னைவிட 20 வயது குறைந்தவரின் காலில் விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications