காணாமல் போன ‘கேளடி கண்மணி’ அஞ்சு; எங்கே போனார்? நடிப்பை நிறுத்தியது ஏன்?
சென்னை: ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக மிகப் பிரபலமாக வலம் வந்த நடிகை அஞ்சு திடீரென்று காணாமல் போய்விட்டார். நடிப்பதையே நிறுத்திவிட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? அவர் சினிமாவை விட்டு விலக என்ன காரணம்?
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முகம், நடிகை பேபி அஞ்சு. 'பொல்லாதவன்' படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடித்திருப்பார். 'கர்ஜனை', 'காளி' என தொடர்ச்சியாக ரஜினியுடன் நடித்துள்ளார். இவரது ஹைலைட் படம் என்றால், அது 'கேளடி கண்மணி'தான். 80களின் தொடக்கத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் 'மதயானைக் கூட்டம்' வரை பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமகேந்திரா எனப் பிரபலமான பல இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரம் என்றால் அஞ்சு என்று சொல்லும் அளவுக்கு திரையில் தனது முகத்தை முழுமையாகப் பதியவைத்த இவர் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டே வெளியேறிவிட்டார். ஏன் போனார்? என்ன ஆனது? என்பது பற்றி ஒரு பேட்டியில் அதே கலகலப்புடன் பேசி இருக்கிறார் அஞ்சு.
"என் அத்தை ஒரு நடிகை. அவர் பெயர் ஜெயா. 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்தப் படத்தின் 100 நாள் விழாவுக்கு குடும்பத்தோடு போய் இருந்தோம். அங்கே இயக்குநர் மகேந்திரன் என்னை பார்த்துவிட்டு படத்தில் நடிக்கக் கேட்டார். அப்போது நான் குழந்தையாக இருந்தேன். என் வீட்டில் யாருமே ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு ஒன்றரை வயது. எப்படியோ வீட்டில் உள்ளவர்களைச் சம்மதிக்க வைத்து 'உதிரி பூக்கள்' படத்தில் நடிக்க வைத்தார். அதுதான் என் முதல் படம். அதில் நான் நடிக்கவே இல்லை.
நான் விளையாட்டாக என்னவெல்லாம் செய்தேனோ அதைப் படமாக அப்படியே ஷூட் செய்தார்கள். நான் அதன் பிறகு எவ்வளவோ படங்களில் நடித்துவிட்டேன். ஆனால், 'உதிரிப்பூக்கள்’ படம்தான் எனக்கு இன்றுவரை அடையாளமாக இருக்கிறது. அதில் 'அழகிய கண்ணே’ என்று ஒரு பாட்டு வரும், அது இன்றுவரை ஃபேவரைட் பாட்டாகப் பலருக்கும் இருக்கிறது.
நான் 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடிக்கும் போது பாரதிராஜாவைப் பார்த்தாலே எல்லா நடிகைகளும் பயப்படுவார்கள். ஆகவே, அவர் இருந்தால் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அவர் பாறையில் போய் ஒளிந்துகொண்டார். என் காட்சிகளை மணிவண்ணன் தான் எடுத்தார். அதைப் பல முறை என்னிடம் அவர் சொல்லிச் சொல்லி காட்டி இருக்கிறார். அதன் பின்னால் 'கேளடி கண்மணி’ படத்தின் போது நடிக்கவே வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துவோம் என்று முடிவு செய்த காலத்தில் அந்த வாய்ப்பு வந்தது. நான் வேண்டாம் என நிராகரித்துவிட்டேன். வீட்டிலும் வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். நான் நன்றாகப் படித்து நேவியில் வேலையில் சேரவேண்டும் எனக் கனவு கண்டுகொண்டிருந்தேன். விடாப்பிடியாக வஸந்த் என்னை நடிக்கவைத்தார்.
எஸ்.பி.பியுடன் மருத்துவமனையில் நான் இருப்பதைத்தான் முதல் காட்சியாக எடுத்தார்கள். எஸ்.பி.பியுடன் பல நாட்கள் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை அங்கிள் என்று அழைத்தால் பிடிக்காது. அப்பா என்று கூப்பிடச் சொல்வார். அவரை அப்படிதான் அழைத்தேன். அவர் இறந்த போது என்னால் தாங்கவே முடியவில்லை.
அந்தப் படத்தில் இயக்குநர் வஸந்த் அதிகமாக திட்டுவார். எனக்கு ரொமான்ஸ் பண்ணவே வராது. ஒவ்வொரு முறையும் சத்தம் போடுவார். பாதியிலேயே போய்விடலாம் என்று கூட நினைத்தேன். பிறகு எடுக்கப்பட்ட காட்சிகளைப் போட்டுக்காட்டி விளக்கம் அளித்தார் வஸந்த். அப்போதுதான் நடிப்பின் அருமை புரிந்தது. சிறப்பாக நடித்ததால்தான் இப்போது நான் டிவி சீரியல் நடிக்க வந்த பிறகு சில வாரங்கள் முன்னால் அந்தப் படத்தின் காட்சிகளைப் போட்டு பலரும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்தார்கள்.
ஆனாலும் சினிமாவில் எனக்கு இன்னும் சரியான ஒரு பெரிய வாய்ப்பு வரவில்லை என்றே நினைக்கிறேன். அம்மா இறந்த பிறகு மனரீதியாக நிறைய அழுத்தம் இருந்தது. அதிலிருந்து வெளிவரவே முடியவில்லை. 9 வருடங்கள் நடிக்காமலிருந்தேன். அவரையே நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மகன் சின்ன பையனாக இருந்தான். அவனை வளர்க்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. இடையில் ஆஸ்திரேலியா போய்விட்டேன்.
அதன்பிறகு வாய்ப்பு வராமல் போய்விட்டன. ஒரு பக்கம் நடிக்க ஆள் இல்லை என்று சொல்கிறார்கள். மற்றொரு பக்கம் எங்களைப் போன்ற நடிகைகளைப் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். எனக்கே ஒரு குழப்பம் வருகிறது. இப்போது நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னை நம்பி மகன் இருக்கிறான். அப்பா இருக்கிறார். அவர்களுக்காகவாவது நான் நடிக்க விரும்புகிறேன்” என்கிறார்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications