Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா அடிக்கடி பேசுறாராமே.. என்ன நடக்குது.. சட்டுன்னு கேட்ட "மேலிடம்.." தடதடத்த திமுக எம்.பி!

கனிமொழிக்கு டெல்லியில் செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - பாஜக இடையே என்ன நடக்கிறது? குறிப்பாக உள்துறை அமைச்சர் கனிமொழியிடம் அடிக்கடி பேச காரணம் என்ன? என்ற கேள்வியை காங்கிரஸ் மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறதாம்.

சமீபத்தில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தன்னுடைய 54வது பிறந்தநாளை கொண்டாடினார்... கருணாநிதி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

பிறகு கோபாலபுரம் வீட்டில் அஞ்சலி செலுத்தியது, முதல்வர் ஸ்டாலின் - துர்கா தம்பதியிடம் வாழ்த்து பெற்றார்..

 அமித்ஷா

அமித்ஷா

இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடப்பது தான் என்றாலும், நடந்தாலும், அமித்ஷா போனில் அழைத்து வாழ்த்தியதுதான் அனைவரின் கவனத்தை அப்போது ஈர்த்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கனிமொழிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தது ஏன்? அந்த நேரம்தான், டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற திமுக எம்.பி.க்கள் குழுவை சந்திக்க அமித்ஷா மறுத்திருந்தார்.. பிறகு கனிமொழியிடம் மட்டும் பேசியிருப்பது ஏன்? என்ற கேள்விகள் வட்டமடிக்க ஆரம்பித்தன..

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருவதாக இருந்த நிலையில், கனிமொழி ஒரு பேட்டி தந்திருந்தார். மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மாநிலத்துக்கு வரும் பிரதமர் மோடியை எதிர்க்க தேவையில்லை என்பதே அந்த பேட்டி.. ஒருவேளை கனிமொழி தந்த இந்த பேட்டிதான் உள்துறையின் கவனத்துக்கு சென்றிருக்கலாம் என்றும் அதனாலேயே கனிமொழிக்கு அமித்ஷா வாழ்த்து சொல்லி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

 புகைச்சல்

புகைச்சல்

மாணவர்களின் கல்விப் பிரச்சினைக்காக அமித்ஷா அலுவலகத்திற்கு நேரடியாக சென்றும் சந்திக்காத நிலையில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மட்டும் எங்கிருந்து நேரம் கிடைத்தது? என்று திமுகவுக்குள்ளேயே சிலர் கேள்விகளை தொடுத்து கொண்டிருக்கின்றனர்.. எனினும் இப்போது வரை அந்த புகைச்சல் அடங்கவே இல்லையாம்.. சமீபத்தில் டி.ஆர்.பாலு, சோனியா காந்தியை சந்தித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழை கொடுத்திருக்கிறார்..

 சோனியா காந்தி

சோனியா காந்தி

அந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது.. அப்போதுதான், டிஆர் பாலுவிடம், கனிமொழியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி போனில் பேசுகிறாரே, என்ன நடக்கிறது? என்று கேட்டாராம்.. இந்த கேள்வியை டிஆர் பாலு எதிர்பார்க்கவில்லை என்றாலும், வெறும் பிறந்த நாள் வாழ்த்து தான் சொன்னார், வேறொன்றுமில்லை என்று கூறினாராம்.. எனினும், திமுகவின் நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடமும் உற்று நோக்கி கொண்டுதான் இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

 சலசலப்பு

சலசலப்பு

இந்த சலசலப்புகள் குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. உண்மையிலேயே பாஜக - திமுகவுக்குள் என்ன நடக்கிறது? என்று கேட்டோம்.. அவர்கள் சொன்னதாவது: "பிறந்த நாள் வாழ்த்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் நல்லெண்ண அடிப்படையில் சொல்லலாம்.. அரசியல் கட்சிகளுக்குள், தலைவர்களுக்குள் இதெல்லாம் சகஜம்.. பிறந்த நாள்வாழ்த்து சொன்னதைகூட அரசியலாக்குவது சரியல்ல..

 டிஆர் பாலு

டிஆர் பாலு

மற்றொன்று, திமுகவின் டெல்லி முகமாக கனிமொழியைத் தான் பாஜக பார்க்கிறது.. டெல்லியில் ஒரு சிக்கல் என்றால், முன்பெல்லாம் மாறனை தான் கருணாநிதி அனுப்பி வைப்பார்.. மாறனுக்கு பிறகு, இந்த பணி அப்படியே டிஆர்பாலு, கனிமொழி வசம் போனது.,. இவர்கள் இருவரும் இப்போதுவரை திமுக நலனுக்காகவே டெல்லியில் செயல்பட்டு வருகிறார்கள் என்பது பாஜகவுக்கும் தெரியும். இதில், டி.ஆர். பாலு அளவுக்கு கனிமொழி நாடாளுமன்றத்தில் கடுமை காட்டமாட்டார்.. மென்மை போக்கை கடைப்பிடிப்பார்.. இதெல்லாம்கூட கனிமொழிக்கு அமித்ஷா வாழ்த்து சொன்ன பின்னணியாக இருக்கலாம்.

 மக்கள் பிரச்சனை

மக்கள் பிரச்சனை

அதேபோல, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் கவனத்தை திசை திருப்புவது என்பது பாஜகவுக்கு வழக்கமான விஷயம்தான்.. அந்த வகையில் தமிழக எம்பிக்களை புறக்கணித்துவிட்டு கனிமொழிக்கு வாழ்த்து சொன்னதாக இருக்கலாம்.. இது, ஒரு மரியாதை நிமித்தமான உரையாடல்தானே தவிர,ஸ்டாலினுக்கு எதிரான, மற்றும் கனிமொழிக்கு ஆதரவான விஷயமாக பார்க்க வேண்டியதில்லை.

 ட்வீட்டில் நன்றி

ட்வீட்டில் நன்றி

இப்படித்தான், ஒருமுறை, தூத்துக்குடி மீனவர்கள் காணாமல் போனபோது, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு போன் போட்டு பேசி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பி கனிமொழி கேட்டுக் கொண்டிருந்தார்.. அதன்படியே மத்திய அரசும் நடவடிக்கை எடுத்தது. மீனவர்களும் பத்திரமாக ஊர்திரும்பி விட்டனர்.. இந்த தகவலை பகிர்ந்து அமித்ஷாவுக்கும் நன்றி சொல்லியிருந்தார் கனிமொழி.. எனவே, நன்றி சொல்வதும், வாழ்த்து சொல்வதும் அரசியலில் சாதாரண நிகழ்வுதான், இதையெல்லாம் தேவையில்லாமல் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+